பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொற்கண்ணம் 7 எம் தரம் ஆள் உமையாள் கொழுநற்கு ஏய்ந்த பொற்கண்ணம் இடித்தும் நாமே 3 நிதி பரப்பி-நவமணியும் பொன்னுமாகிய நிதிகளைப் பரப்பி. அந்தரர்-தேவர்கள். ஆழியான்-திருமால். 'நெற்றியில் அழகிய நீறணிந்த பெண்களே! வீடு முழுவதையும் மெழுகி, அழகிய நிறமுடைய பொடிகளைத் துவி, இடையிடையே பொற்காசுகளைப் பரப்புங்கள். இவற்றினிடையே கற்பகச் செடிகளை நாட்டி, விளக்கு வைத்து, கொடிகளை நடுங்கள். இவை அனைத்தும் வீட்டின் முகப்பிலும் வீட்டின் முற்றத்திலும் செய்யப்படும் செயல்களாகும்.) 'இந்திரன், நான்முகன், திருமால் ஆகியோர்க்குத் தலைவனும்- வேலவனின் தந்தையும்- எங்கள் பெருமாட்டியின் கணவனும் ஆகிய பெருமானுக்கு நீராடப் பொற்சுண்ணம் இடிக்கத் தொடங்குங்கள் என்கிறார். ஆங்கிலத் திறனாய்வில் மிக உயர்ந்த பொருளையும் மிக இழிந்த பொருளையும் அடுத்து அடுத்து வைத்துக் கூறுவதை மிக உயர்விலிருந்து தாழ்வுவரை கூறுதல் (fron) Subline to the ridiculous) gross). Glermóð66örp Losriq 2.6*TG). அந்த மரபு இந்தப் பாடலின் மூன்று, நான்காம் அடிகளில் இ. ம் பெறுவதைக் காணலாம். ஈடு இணையின்றி மிக உயர்ந்து நிற்பதை "Subline இறைத் தன்மையோடு கூடிய உயர்வு) என்ற ஆங்கிலச் சொல் குறிக்கும். இறைவனின் இந்த உயர்வைக் கூறவந்த அடிகளார் அந்தரர் கோன், அயன்தன் பெருமான், ஆழியான் நாதன் என்ற மூன்று தொடர்களில் அனைவர்க்கும் தலைவன் என்று குறிக்கின்றார். இம்மூவரும் விண்ணுலகிலும் சத்தியலோகத் திலும் வைகுந்தத்திலும் இருப்பவர்களாவர். நம்முடைய மன எல்லைக்கு அப்பாற்பட்டு நிற்கும். இந்த மூன்று பிரதேசங்களின் தலைவர்களைக் கூறி, அவர்கள் மூவருக்குமே