பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இவன் நாதன் என்று கூறுகையில் சாதாரண மனத்தில் ஒர் அச்சங் கலந்த வியப்புத் தோன்றுகிறதே தவிர நெருக்கம் எதுவும் தோன்ற முடியாது. இதனைப் போக்க வேலன் தாதை என்றும் உமையாள் கொழுநன் என்றும் கூறுகையில் நம்மையும் அறியாமல் ஒரு நெருக்கம் உள்ளே தோன்றுகிறது. இவ்வாறு நாம் கூறுவது சரியே என்பதற்குச் ‘செந்தில் மேய நம் வள்ளி மணாளர்க்குத் தாதை கண்டாய்' என்ற நாவரசரின் பாடல் துணை செய்கிறது. (திருமுறை: 6:23.4) அந்த நெருக்கம் தோன்றியவுடன் எம் தரமும் ஆள் என்ற தொடரை வைத்தது மிகச் சிறந்த முறைவைப்பு ஆகும். எம் தரமும் ஆள் என்பதன் மூலம் எந்தக் கீழான நிலையில் உள்ளவர்களையும் ஆள்கின்றவன் என்று எளிவந்த தன்மைக்கு ஒரு தனி இடம் தருகிறார் அடிகளார். தீமையை அழிப்பதற்கு மட்டுமல்லாமல் நன்மையைக் காப்பதும் கடப்பாடாதலின் நல்வேல்' என்றார் அடிகளார். i98. காசு அணிமின்கள் உலக்கை எல்லாம் காம்பு அணியின்கள் கறை உரலை நேசம் உடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தித் தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சித் திரு ஏகம்பன் செம்ழொன் கோயில் பாடிப் பாச வினையைப் பறித்து நின்று பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே 4 காசு-பொன்வடம். காம்பு-பட்டுத்துணி, கறைபுரல்-கருங் காலியால் செய்யப்பட்ட உரல். நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுக’ என்ற தொடர் ஆழ்ந்து சிந்திப்பதற்குரியது. நேசமுடைய அடியவர் கள் என்ற தொடருக்கு இறைவன்பால் நேசம் உடைய