பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தெள்ளேனம் 103 விடுகின்றானே! அப்படியானால் சலித்தலை நிறுத்தியதால் அவனும் அழிந்துவிடுவானோ என்ற ஐயத்தைப் போக்குவதற்காக, சலிப்பறியாத் தன்மையன் என்பதற்கு முன்னர், 'தான் கெட்டல் இன்றி' என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார். 253. விண்ணோர் முழுமுதல் பாதாளத்தார் வித்து மண்ணோர் மருந்து அயன் மால் உடைய வைப்பு அடியோம் கண் ஆர வந்துநின்றான் கருணைக் கழல் பாடித் தென்னா தென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ 19 வித்து-விதை, வைப்பு-செல்வம். இப்பாடலில் இறைவனை விதையுள் தோன்றும் மரமாக உருவகிக்கின்றார். இதிலும் ஒரு சிறப்புண்டு ஏனைய விதைகள் தம்மை அழித்துக்கொண்டே மரத்தைத் தோற்றுவிக்கும். ஆனால் இறைவன், விதையாக இருந்து மரமாகும்பொழுது தன் நிலையிலிருந்து மாறுபடுவதில்லை. ஒரு மருந்து மரம் வேர்முதல் கொழுந்துவரையுள்ள அனைத்து உறுப்புக்களும் நோயுடையாருக்குப் பல வகையில் உதவுவதுபோல, இறைவனாகிய மரமும் பயன்படுகிறது என்பதைப் பின்வருமாறு கூறுகிறார். நாகலோகத்தார்க்கு விதை என்றும், விண்ணோர்க்கு முழு முதல் என்றும் கூறிய அடிகளார், மிக நுணுக்கமான ஒரு கருத்தை இடையில் வைக்கின்றார். ஸ்துால உடலுடன் (பருஉடலுடன்) வாழ்கின்றவர் களுக்கு மட்டுமே மருந்து தேவைப்படும். எனவே, உலகத் தார்க்கு மருந்து என்றார். ஏனைய இரண்டு உலகங்களிலும் வாழ்பவர்கள் சூக்கும உடலுடன் வாழ்கின்றவர் ஆதலின் மருந்து என்ற குறிப்பு அங்கே தரவில்லை. முயன்று தேடிவைத்த செல்வத்தையே வைப்புநிதி என்கிறோம். இறைவன், மாலுக்கும் அயனுக்கும்