பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 பல்வேறு பொருள்கள் இருப்பினும் அசைதல் என்ற பொருளே இங்குப் பொருத்தமுடையதாகும். பிரபஞ்சம் முழுவதையும் படைத்து, அவற்றில் ஊடுருவியும் வெளிப் பட்டும் இருப்பவன் இறைவன் என்பது முன்னரே பலமுறை பேசப்பெற்றது. மகாப்பிரளய காலத்தில் மண்ணில் தொடங்கி வானம் ஈறாகவுள்ள எல்லாப் பொருள்களும் அழிக்கப்படுகின்றன. பிரபஞ்சம் மீட்டும் வெளிப்பட்டு நிற்கையில் அணு வடிவாக இருக்கின்ற இதனுள் ஒவ்வொன்றும் ஓயாது சலித்துக் கொண்டே (அசைந்துகொண்டே இருக்கின்றன. அணுவினுள் ஓயாது சலித்துக்கொண்டிருக்கிற எலக்ட்ரான்கள், சலிப்பை நிறுத்தினால், அந்த அணு அழியும். பிரபஞ்சம் முழுவதும் அணுக்களால் ஆனதே என்பது இன்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தத்துவமாகும். அவை அனைத்தும் அழிந்த நிலையே மகாய் பிரளயம் அல்லது ச்ர்வ சங்காரம் என்று சொல்லப்படும். அந்த நிலையில் மூலப்பொருளாகிய இறைவன் ஒருவனே உள்ளான். அவனும் அசைவில்லா ஒன்றாக உள்ளான். இப்பொழுது முக்கூட்டுப் பரிமாணமுடைய பிரபஞ்சமும், நான்காவது பரிமாணமாகிய காலத் தத்துவமும் அசைவற்று நின்றுவிட்டன. தானும் அசைவில்லாமல் இருக்கும் பரம்பொருள், ஒரு சிறிது அசையத் தொடங்கினால் அந்த அசைவு சக்தி என்று சொல்லப் பெற்று, பிரபஞ்ச உற்பத்திக்குக் காரணமாகிவிடும். சர்வ சங்கார காலத்தில் சக்தி, சிவத்துள் அடங்கி, சிவம் எவ்வித அசைவும், செயலும் தொழிற்பாடும் இல்லாமல் இருக்கின்ற நிலையையே சலிப்பு அறியாத் தன்மை’ என்கிறார். பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருள்களும் சலித்துக் கொண்டேயிருக்கின்றன. அவை சலித்தலை நிறுத்தினால் அழிந்துவிடும் என்று முன்னர்க் கூறியுள்ளோம். சர்வ சங்கார காலத்தில் பரம்பொருள் சலித்தலை நிறுத்தி