பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தெள்ளேனம் 101 அந்த உடம்பினுள் நுண்மையாக அமைந்தவை நான்கு அந்தக்கானங்களாகும். அவற்றுள் உணர்வு தோன்றுகின்ற இடம் சித்தம். இதனையும் தாண்டி நிற்பது அகங்காரமாகிய நான்'. எந்த நிலையிலும், அதாவது ஆழ்ந்த மயக்கத்திலும் கூட, இந்த நான் கெடுவதில்லை. சாதாரண உலகியலில் கூடக் கட்டைபோல உறங்கினேன்’ என்று சொல்வதுண்டு. கட்டைபோல உறங்கும்போது அவனுடைய நான்’ உறங்காமல் இருப்பதானாலேயே ஏனைய பகுதிகள் உறங்கியதைக் குறிக்க முடிகிறது. ஆக, இந்த நான்’ என்ற அகங்காரத்தின்மேல் உணர்வும், அது தோன்றுகின்ற இடமாகிய சித்தமும், இவை அனைத்தையும் தாங்கிநிற்கும் உடலும் அமைந்துள்ளன. இறை அனுபவம் பூரணமாகக் கிட்டும்பொழுது இவை அழிகின்றன. அழிகின்றன என்று கூறினால் இல்லாமல் போய்விடுகின்றன என்பது பொருளன்று. இறையனுபவத்தில் மூழ்கித் திளைக்கும் அடிகளார் போன்றவர்களுக்குக்கூடப் பொறிகளோடு கூடிய உடம்பு, மனம், சித்தம் (உள்ளம்), அதில் தோன்றும் உணர்வு, இறுதியாக நான் என்ற அனைத்தும் உண்டு. ஆனால் இந்தப் பெருமக்கட்கு உடல் முதல் நான் வரையுள்ள அனைத்தும் செயலிழந்துவிடுகின்றன. அதனையே அடிகளார் 'ஊன் கெட்டு, உயிர் கெட்டு, உணர்வு கெட்டு, என் உள்ளமும் போய், நான் கெட்டவா பாடி' என்று பாடுகின்றார். இங்குக் காணப்பெறும் உயிர் கெட்டு' என்ற தொடரில் வரும் உயிர் ஆன்மாவைக் குறிக்கவில்லை. உயிர்ப்பு என்று சொல்லப்படும் மூச்சுக்காற்றையே குறிக்கின்றது. "சலிப்பறியாத் தன்மையன்’ என்ற தொடர் சிந்தனை யைத் துண்டுவதாகும். சலிப்பு' என்ற சொல்லுக்குப்