பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 புத்தருடைய தம்மபதம் ஆகியவற்றைப்பற்றிக் கூறும் நூல்களை விரும்பிக் கற்றிருக்க வேண்டும். சங்கரருடைய சங்கர பாஷ்யம், புத்த சமய நூல்கள் ஆகியவை அறிவுக்குப் பெருவிருந்தாய் அமைந்துள்ளன என்பதை இன்றும் யாரும் மறுக்கமுடியாது. இவற்றையெல்லாம் அடிகளார் நன்கு கற்றிருந்தார் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால், இந்தப் பெருங்கல்வி அவருக்கு மன அமைதியையும், முன்னேறும் வழியையும் கொடுக்கவில்லை என்பதை இப்பாடலின் முதலிரண்டு அடிகள் குறிக்கின்றன. அவை தமக்கு ஈடுபாட்டைத் தரவில்லை ஆதலால் உவலை பொய்)ச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரம்’ என்றார். உவலைச் சமய நூல்களைக் கற்பதனால் உடல், மன இளைப்புகளைத் தரும் கடலுள் மூழ்கிக் கிடந்த தமக்கு முன்னேறும் வழிகாட்டினான் என்கிறார். 252. வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண் கெடினும் தான் கெட்டல் இன்றிச் சலிப்பு அறியாத் தன்மையனுக்கு ஊன் கெட்டு உயிர் கெட்டு உணர்வு கெட்டு என் உள்ளமும் போய் நான் கெட்டவா பாடித் தெள்ளேனம் கொட்டாமோ 18 வான்கெட்டு-எல்லாப் பூதங்களும் நிலவ இடங்கொடுத்து நிற்கும் ஆகாயமும் ஒடுங்கி. தான்-சிவம். சலிப்பு-அசைதல், நான்-தற்போதம். இப்பாடலின் முதலிரண்டு அடிகள் மகாப்பிரளயத்தைக் குறிக்கின்றன. அதுபோது எந்த ஒன்றும் மிஞ்சுதலின்றி, இறைவன் ஒருவனே எஞ்சியுள்ளான். ஆதலின், அதனைக் குறிக்க தான் கெ(ட்)டல் இன்றி என்று கூறினார். அடுத்த இரண்டு அடிகள் ஒரு மிகப் பெரிய தத்துவத்தை விளக்குவன ஆகும். ஒரு மனிதனுக்குப் பருப் பொருளாக அமைந்தது பொறிகளோடு கூடிய உடம்பாகும்.