பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தெள்ளேணம் 99 இன்றும்கூட, புத்தருடைய பழைய அவதாரங்களில் திருமாலாக வந்த அவதாரமும், முருகனாக வந்த அவதாரமும் ஒவ்வோர் இடத்தைப் பெறுவதாகக் கருதுகின்றனர். அடிகளார் காலத்தில் இக்கருத்து வலுப்பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு கொள்ளாமல் சிவ பூசை செய்கின்ற திரிபுராதிகளைச் சிவபூசை செய்யாமல் தடுத்து, அவர்களது மனத்தை மாற்றத் திருமால் புத்த அவதாரம் எடுத்துச் சென்றார் என்பது சைவர்களின் புராணக் கதைகளில் ஒன்றாக இருப்பினும் இக்கதை இங்கு பொருந்துமாறில்லை. 251. உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரம் ஆம் சவலைக் கடல் உளனாய்க் கிடந்து தடுமாறும் கவலைக் கெடுத்துக் கழல் இணைகள் தந்தருளும் செயலைப் பரவி நாம் தெள்ளேனம் கொட்டாமோ 17 உவலை-பொய். சவலைக்கடல்-திட்பமில்லாத கடல். கவலை-பிளவு பட்ட எண்ணம். கவலை கெடுத்து என்பது கவலைக் கெடுத்து என வந்தது விரித்தல்விகாரம். மாபெரும் கல்வியாளரும், கவிஞரும் ஆகிய திருவாதவூரர் அமைச்சராகவும் இருந்தார். இரண்டாம் வரகுணன் காலத்தில் பாண்டி நாடு மிகப் பெரிதாக விரிந்தில்லா விடினும் ஒரளவு விரிந்தே இருந்தது என்பதை வரலாறு அறிந்தார் ஏற்பர். எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய ஆதி சங்கர பகவத் பாதர் புத்த சமயத்திலுள்ள தருக்க அடிப்படையில் அச்சமயக் கொள்கைகளை மறுக்க விரும்பியதால், பெளத்த சமயத்தை மிக நுணுக்கமாகக் கற்றார் என்று கூறுவர். ஆதிசங்கரரை அடுத்து அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியவர் அடிகளார் ஆவார். எனவே, அடிகளார் சங்கரருடைய அத்வைதம்,