பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 கருணை, கடல் போன்றிருப்பினும் அதனை உண்ணப் புகும் நம் வாய் மிகச் சிறியதாய் இருத்தலின் சாதாரண நீரை முகந்து குடிப்பதுபோல இந்த இனிய கடலின் நீரையும் முகந்துகொண்டு குடிக்க வேண்டும் என்றார். 'முகந்து கொண்டு என்ற சொல்லிலும் நுணுக்கமுள்ளது. கடல் நீரை முகக்கச் செல்வோர் அவரவர் சக்திக்கேற்பச், சிறு கிண்ணம், செம்பு, குடம், அண்டா என்று சிறிய பெரிய பாத்திரங்களில் முகந்து வருவரன்றோ? அதேபோல இந்தப் பரங்கருணைத் தடங் கடலிடம் சென்றோரும், தத்தம் சித்தத்தின் எல்லைக்கு ஏற்ப அல்லது அளவுக்கு ஏற்ப முகந்து வரமுடியும். இந்த நிலையிலும் ஒரு குறை தோன்றக்கூடும். முகக்கும் பாத்திரம் வாய் மூடியதாக இருப்பினும், அடிப்பகுதி இல்லாமல் இருப்பினும் எவ்விதப் பயனையும் விளைக்காது. அதேபோல, பரங்கருணைத் தடங்கடலில் சென்று முகப்போர் கொண்டுசெல்லும் பாத்திரம் பெரியதாகவும், மேற்பகுதி விரிந்தும், அடிப்பகுதி நன்கு மூடப்பெற்றும் இருத்தல் வேண்டும். அதனைக் கூறவந்த அடிகளார், நெஞ்சு உருகி என்றும், அன்பு பெருகி என்றும் கூறுவதால் இதனைக் குறிப்பிட்டாராயிற்று. நெஞ்சு உருகி அன்பு பெருகி உள்ளவர்கள் இதயம் மிகவும் விரிந்திருத்தலின் பரங்கருணைத் தடங் கடலில் முகந்து பருகுவர் என்பதைக் கூறினார். 250. புத்தன் புரந்தர ஆதியர் அயன் மால் போற்றி செயும் பித்தன் பெருந்துறை மேய பிரான் பிறப்பு அறுத்த அத்தன் அணி தில்லை அம்பலவன் அருள் கழல்கள் 'சித்தம் புகுந்தவா தெள்ளேனம் கொட்டாமோ $6 புரந்தரன் -இந்திரன். அத்தன்-தலைவன், - தேவர்கள், அயன், மால் என்பவர்களோடு புத்தனையும் வைத்து எண்ணியது அடிகளார் காலத்திலிருந்த சில நம்பிக்கைகளை உட்கொண்டதாகும். பெளத்த சமயத்தார்