பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தெள்ளேணம் 97 அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க’ (திருவாச:345) என்று கூறிய இடத்தில் பருமைக்கு எதிர்மறையான நுண்மையைக் கூறினார். இந்தப் பாடலில் கூறப்பெற்ற துண்ணியன்’ என்பது மேலே கூறியதற்கு மாறுபட்டதாகும். மனிதர்களுடைய அறிவு, உணர்வு என்பவை பருப் பொருளையும் சிந்திக்கும், நுண்பொருளையும் சிந்திக்கும். அணுவின் உள்ளீடாகவுள்ள எலக்ட்ரான், பாசிட்ரான், மீசோன் என்பவை நுண்மை வடிவிற்கு ஒர் எல்லையாய் அமைந்துள்ளன. விஞ்ஞானிகளின் அறிவு இந்த துண்மை யிலும் புகுந்து அவற்றின் இயல்புபற்றி ஆராய்கின்றது. நுழைவு அரிய நுண்ணியன்’ என்றதால் அறிவாலும் உணர்வாலும் சிந்திக்கப்படுகின்ற இந்த நுண்மையையும் அடிகளார். இங்குக் குறிப்பிடவில்லை. மிக நுண்ணிய அறிவும் மிக ஆழமான உணர்வும், கற்பனையும் எட்ட முடியாத, சிந்திக்க முடியாத (Inconciewable) ஒரு நுண்மையையே அடிகளார் இங்கே குறிப்பிடுகிறார். 249. உருகிப் பெருகி உளம் குளிர முகந்துகொண்டு பருகற்கு இனிய பரம் கருணைத் தடம் கடலை மருவித் திகழ் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் திருவைப் பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ 15 பெருகி-உடல் பூரித்து. மருவி-சேர்ந்து. இப்பாடலின் முதலிரண்டு அடிகள் மிக விரிவானதும், நுண்மையானதுமான ஒரு கருத்தை வெளியிடுகின்றன. இறைவனைப் பரங் கருணைத் தடங்கடல் என்றார். கடல் என்று உருவகம் செய்தவுடன் அவ்வுருவகத்தான் வரும் நெருடல்கள் மனத்திடைத் தோன்றுகின்றன. எங்கு நோக்கினும் தண்ணிர் ஆயினும், ஒரு சொட்டும் உண்ணத் தகுதி அற்றிருப்பது நம் நினைவில் வரும். அதை மறுக்க 'பருகற்கு இனிய. தடங்கடல் என்றார்.