பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 - திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 தன்மையானவன்' ஆதலின் அவனே &#, i. அவன் பெருமையை முற்றிலும் அறிய முடியாததலின், தனிப் பெரியோன்’ என்றார். பெரியோன் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தியிருப்பின் நம்முடைய சிற்றறிவைப் பயன்படுத்தி அவனுடைய பெருமைக்கு ஓர் எல்லை கட்டி விடுவோம். அந்தத் தவறு நிகழாமல் இருக்கவே "தனிப்பெரியோன்' என்று பாடுகிறார். அவன் புகழைப் பாடித் தெள்ளேனம் கொட்டலாம் என்கிறார். 248. மாலே பிரமனே மற்று ஒழிந்த தேவர்களே நூலே நுழைவு அரியான் நுண்ணியனாய் வந்து அடியேன் பாலே புகுந்து பரிந்து உருக்கும் பாவகத்தால் - - சேல் ஏர் கண் நீர் மல்கத் தெள்ளேணம் கொட்டாமோ 14 நூலே நுழைவரியான்-நூல்களால் அறியமுடியாதவன். பாவகம்முற்றிய பாவனை. சேலேர் கண்- சேல்மீனை ஒத்த கண். ஸ்துால உடலுடைய மக்கள், சூக்கும் உடலுடைய தேவர்கள், மூவரில் இருவர் (பிரமன், மால்) ஆகிய அனைவரும் அறிய முடியாதவன் என்றபடி, இதில் தேவர்களுக்கும் இல்லாத ஒரு சிறப்புத் தம்பால் உள்ளதாய்த் தருக்கித் திரியும் மனிதர், நூலறிவினால் இறையருளைப் பெறுவோம் என நம்பினர். அந்த நூலறிவும் அவர்கள் தலைக் கனத்தைப் பெருகச் செய்ததே தவிர, அவன் அருகில் செல்லுமாறு உதவவில்லை. இவற்றை வரிசைப்படுத்திக் கூறிய அடிகளார், இவர்களால் அறியப்படாத இறைவனுக்கு நுண்ணியன்’ என்ற் பெயரைத் தருகிறார். நுண்மை என்றவுடன் பருமை, சிறுமை, நுண்மை என்ற முறையில் நம்முடைய நினைவு செல்லும். அந்த நுண்மையை அடிகளார் இங்குக் கறிப்பிடவில்லை.