பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தெள்ளேணம் 95 தமக்கு ஏற்படவில்லை என்கிறார். இந்நிலையைத் தந்தவன் பெருந்துறையான். மனித உடம்புடன் இருக்கும் பொழுதே அந்த தனிப் பெரியோன் குருநாதர் வடிவில் வந்து காட்சியும் தந்து, ஆட்கொண்டு, அனுபவத்தையும் தந்தான். இவை இரண்டையும் பெற்றபிறகு மீட்டும் அதனை நினைக்கத் தொடங்கிய அடிகளார். 'நினைப்பரிய தனிப்பெரியோன் என்று பாடுகிறார். வேறு எந்த உயிரினத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு மனித இனத்திற்கு உண்டு. கண்டது, காணாதது, நடந்தது நடவாதது ஆகிய அனைத்தையும் அறிவாலும் மனத்தாலும் நினைக்கக்கூடிய ஆற்றல் மனித இனத்திற்கு உண்டு. இல்லாத பொருளையும் தன்னுடைய விருப்பம்போல் வடிவுகொடுத்து நினைக்கும் ஆற்றல் மனித மனத்திற்கு உண்டு. பல்வேறு வடிவுகளைத் தாங்கிநிற்கும். கடவுட் பொருளையும் நேரே காணாதபொழுதும் நினைத்துப் பார்க்கும் ஆற்றல் மனத்திற்கு உண்டு. ஆனால் இப்படி நினைத்ததெல்லாம் மனித மனம் தானே கற்பித்துக் கொண்ட வடிவங்களே தவிர வேறன்று. உண்மையான கடவுட் பொருளைக் 乐fTöY முடியாவிட்டாலும் கற்பனையாகவேனும் நினைத்தாவது பார்க்க முடியுமா என்றால் ஏறத்தாழ முடியாது என்பதே விடையாகும். அடிகளார் போன்ற அருளாளர்கள் இப்பொருளைக் காண்பதற்கு முன்னரே முழுவதும் அந்நினைவாக இருந்தனர் என்று அறிகிறோம். அடிகளார் போன்ற ஒரு சிலருக்கு இது முடியுமாயினும் ஏனையோரைப் பொறுத்த மட்டில் இயலாது ஆதலின் நினைப்பரிய என்றார். அரிய என்ற சொல், நம்மைப் பொறுத்தவரை முடியாத என்ற பொருளைத் தந்துநிற்குமேனும் அடிகளாரைப் பொறுத்த மட்டில் முற்றிலுமாக நினைந்து அறிந்து கொள்வதற்கு அரியவன் (அப்பாற்பட்டவன்) என்ற பொருளைத் தந்து நிற்கின்றது. யாராலும் ஏன் 'தன் பெருமை தான் அறியாத்