பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 246. முத்திக்கு உழன்று முனிவர் குழாம் நனி வாட அத்திக்கு அருளி அடியேனை ஆண்டுகொண்டு பத்திக் கடலுள் பதித்த பரஞ்சோதி தித்திக்குமா பாடித் தெள்ளேனம் கொட்டாமோ 12 "அத்திக்கு அருளி அடியேனை ஆண்டுகொண்டு' என்றதால், ஒரு கை உடையதாகிய யானை (அத்தி)க்கு திருவானைக்கா, மதுரை, காளத்தி ஆகிய இடங்களில் அருள் செய்த பெருமான் இரு கை யானையை ஒத்திருந்த எனக்கும் அருள்செய்தான் என்றபடி, ஆண்டுகொண்டதும் பக்திக் கடலுள் அமிழ்த்தியதும் உடன் நிகழ்ச்சிகளாகும். 247. பார் பாடும் பாதாளர் பாடும் விண்ணோர்தம் பாடும் ஆர் பாடும் சாரா வகை அருளி ஆண்டுகொண்ட நேர் பாடல் பாடி நினைப்பு அரிய தனிப் பெரியோன் சீர் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ 13 பாடும்-பக்கமும். நேர்பாடல்-நேரிடுதல் எதிர்ப்பாடு. இப்பாடலில் ஒரு மாபெரும் தத்துவத்தைக் கூறியுள்ளார் அடிகளார். எறும்பு முதல் யானை ஈறாய விலங்கு வர்க்கங்கள்கூடத் தம் இனத்தையும், இனமல்லாத பிற விலங்குகளையும் சார்ந்தே வாழவேண்டியுள்ளது. இவற்றின் உயர்ந்ததாகத் தம்மைக் கருதிக்கொண்டு, தருக்கித் திரியும் மனித இனமும், இந்த விதிக்கு விலக்கில்லை; உலகிடை வாழ்வோர் தம் இனத்தார், தேவர், நாகர் (பாதாளத்தார்) ஆகியோரை அண்டி வாழவேண்டியுள்ளது. திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பிறகு இந்தப் பொதுவிதிக்கு விலக்காக, அடிகளார் வாழ முடிந்தது. யார் பக்கமும் சென்று அவர்கள் தயவை நாடும் சூழ்நிலை