பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தெள்ளேணம் 93 மனமும் மொழியும் போக, மூன்றாவதாக உள்ளது செயலாகும். மனம் ஈடுபட்டே செயல் நிகழ்கின்றது என்று கூறுவர். சில சமயங்களில் மனம் ஈடுபடாமலும் செயல் நடைபெறுவதுண்டு எனவே, மனம் ஈடுபட்டோ அல்லது ஈடுபடாமலோ நிகழும் செயலும் மாண்டது என்பார் 'செயல் மாண்டவா பாடி என்றார். இங்கு அடிகளார் கூறியவற்றின் சிறப்பைச் சற்றுச் சிந்தித்தல் வேண்டும். ஒர் உயிர் உடம்பெடுத்து இந்நிலவுல கில் வாழ்கின்றவரை அருவினைச் சுற்றம் முதலியவை கூறியவை இருந்தே திரும். இவை நீங்கவேண்டுமாயின் ஒரே வழி இவ்வுடம்பை விட்டு உயிர் நீங்க வேண்டும். இதனை அல்லாமல் மற்றொரு வழியும் உளது. அந்த ஒரு வழி இந்த உடம்புடன் இருக்கும்போதே இறைவனால் ஆட்கொள்ளப் படுவதாகும். அந்தத் திருவடி சம்பந்தம் கிடைத்துவிட்டால், மேலே கூறப்பெற்றுள்ளவை அவரைவிட்டுத் தாமே நீங்கிவிடும். இதில் வியப்பென்னவென்றால், திருவடி சம்பந்தம் பெற்றவரும். இந்த உடம்புடனேயே வாழ்வார். நம்மைப் போலவே அவருக்கும் பொறி புலன்கள் உண்டு; மனம் மொழி மெய் என்பவையும் உண்டு. என்றாலும், இவற்றுள் ஒன்றும் அவரைப் பாதிக்காது. இவற்றால் விளையும் பயன்கள் அவரை ஒன்றும் செய்வதில்லை. தாமரை இலைத் தண்ணிர், அந்த இலையின்மேல் இருந்தாலும், அதன்மேல் சுற்றிச் சுற்றி ஓடிவந்தாலும் இலையில் ஒட்டுவதில்லை. அதேபோலத் திருவடிசம்பந்தம் பெற்ற இவர்கள், உலகிடை வாழ்ந்தாலும் அதனிடைச் சுற்றிச்சுற்றி வந்தாலும், என்ன செய்தாலும் என்ன பேசினாலும் இவ்வுலகோடு ஒட்டி இரார். இதனையே அடிகளார் மாண்டு மாண்டு என்ற சொற்களால் குறிப்பிட்டுள்ளார்.