பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 குருநாதரின் திருவடிகளில் வாதவூரர் மறைந்துவிட்டார் என்பதாம். இது அயல் மாண்ட தாகும். வாதவூரர் என்று இருக்கும்போது எண்ணிலடங்காச் சுற்றம் இருந்தது. அந்தச் சுற்றமும் இரு வகைப்படும் முதலாவது பழவினை காரணமாக வந்த தாய், தந்தை, உடன்பிறந்தார் முதலிய சுற்றங்களாகும். இரண்டாவது வகை, பதவி காரணமாக வந்த அரசர், உடன் பணிபுரிவோர், ஆணையின்கீழ்ப் பணிபுரிவோர் எனப்படும் சுற்றமாகும். 'அருவினை என்பது இருவகையாகப் பொருள் கொள்ளப்படும். மிகப் பழைய வினையின் விளைவாக வந்த சுற்றம் என்பது ஒரு பொருள். இந்தச் சுற்றம் அடிகளார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர் வினைக்கு ஏற்ப வந்த சுற்றமாகும். அருவினை என்பது மிக உயரிய அமைச்சர் தொழில் என்ற பொருளையும் தந்து நிற்கும். இதனால் வரும் சுற்றம் மேலே விரிக்கப்பெற்றது. "அவனியின் மேல் மயல் மாண்டு, மற்று உள்ள வாசகம் மாண்டு, என்னுடைய செயல் மாண்ட” என்பது அடுத்துள்ளதாகும். இங்குக் கூறப்பெற்றுள்ள மூன்றும் மனம், மொழி, மெய்களால் நிகழும் செயல்களாகும். உலகிலுள்ள பொருட்கள்மேல் பற்றுவைத்தல் மனத்தின் செய்லாகும். கிட்டாத பொருளாயினும், அதன்மேல் பற்று வைத்து, ஒயாது நினைந்து அவதிப்படுவது மனத்தின் செயலாகும். - வாசகம் என்பது சொல். வள்ளுவரும், ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் கர்த்தோம்ப சொல்லின்கட் சோர்வு (குறள்:642) என்ற குறளில் சொல்லால் விளையும் நன்மை தீமைகளை எடுத்துச் சொல்வதால், அதுவும் ஒழிந்தது என்ற கருத்தில் 'வாசகம் மாண்டு என்றார்.