பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தெள்ளேனம் , 91 கூறிச்செல்கிறார். 240ஆம், 243ஆம் பாடல்கள்போல், இப் பாடலும் அதனை எடுத்துக்காட்டுகின்ற ஒர் இடமாகும். 245. கயல் மாண்ட கண்ணிதன் பங்கன் எனைக் கலந்து ஆண்டலுமே அயல் மாண்டு அருவினைச் சுற்றமும் மாண்டு அவனியின்மேல் மயல் மாண்டு மற்று உள்ள வாசகம் மாண்டு என்னுடைய செயல் மாண்டவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ 11 'கயல் மாண்ட கண்ணிதன் பங்கன்’ என்பதற்கு, கயல் மீனைப் போன்ற மாட்சிமைப்பட்ட கண்களை யுடைய இறைவியின் பங்கினன் என்பது பொருளாம். அன்றியும் மற்றொரு பொருளும் இதற்குண்டு. மீன்கள் நூற்றுக்கணக்கான முட்டைகளை இட்டு, சற்றுத் துரத்தே சென்று, அம்முட்டைகளைத் திரும்பிப் பார்க்கும்போது குஞ்சுகள் வெளிப்படும் என்பது பழைய கால நம்பிக்கை எனவே கயல்மாண்ட கண்ணி’ என்பதற்குக் கயல் மீனைப்போலக் கோடிக்கணக்கான உயிர்களைத் தன் அருட்பார்வையினால் படைக்கும் கண்ணினை உடையாள் என்றும் பொருள் கொள்ளலாம். அடுத்துள்ள மூன்று அடிகளும் மிக ஆழமான பொருளுடையவையாம். கண்ணிதன் பங்கன், திருவாதவூரரை அவருடைய பெயர் முதலியவற்றை நீக்கி, மணிவாசகராக்கி, அவர் உட்புகுந்து முற்றிலுமாக ஆட்கொண்டுவிட்டான். அவ்வாறு அவன் ஆட்கொண்டவுடன் சற்றும் எதிர்பாராத பல நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் நடைபெற்றன. அவை யாவை என்று அடிகளார் விளக்குகின்றார். முதலாவது நிகழ்ச்சி குருநாதர், அயலாக இருந்த வாதவூரர் என்ற இருவராக இருந்த நிலை நீங்கி,