பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 சிறந்த விவசாயி தேர்ந்தெடுத்த விதைநெல்லை விதைப்பதற்கு முன்னர், நிலத்தை உழுது பண்படுத்துகிறான் அல்லவா? இதனைச் செய்யாவிடின் விதையின் சிறப்பு வெளிப்பட வாய்ப்பில்லை. எனவே, தம் திருவடிகளை தருவதற்கு முன்னர், குருநாதர் அடிகளாருடைய உள்ளத்தைப் பண்படுத்தினார். அதனைக் கூறவந்த அடிகளார், இரண்டு சொற்களில் அக் கருத்து முழுவதையும் பேசிவிடுகிறார். கல்நார் உரித் தென்ன” என்ற சொற்கள் ஆழமான பொருளுடையவை. கல்போன்றிருந்தது அடிகளாரின் நெஞ்சம். அக்கல்லில் நார் உரிப்பதுபோல் அந்த நெஞ்சத்திலுள்ள உருகாத தன்மை யைப் போக்கி, உருகும் தன்மையைத் தந்தார் குருநாதர். 'கல்லைப் பிசைந்து கனியாக்கினான்’ (திருவாச:79) என்று முன்னரும் பேசியுள்ளார். 244. கனவேயும் தேவர்கள் காண்பு அரிய கனை கழலோன் புன வேய் அன வளைத் தோளியொடும் புகுந்தருளி நனவுே எனைப் பிடித்து ஆட்கொண்டவா,நயந்து நெஞ்சம் சின வேல் கண் நீர் மல்கத் தெள்ளேணம் கொட்டாமோ 10 கனலேயும்-கனவிலும். புன வேய் அன்ன-காட்டு மூங்கிலை ஒத்த. நனவே நல்ல விழிப்பு நிலையிலேயே. சினவேல் கண்சிறிய வேல் போன்ற கண்கள். திருப்பெருந்துறையில் இருந்தவர் குருநாதர். ஆண் வடிவில் இருந்த அவர், புறக்கண்ணுக்குத் தோற்றம் அளித்தாரே தவிர அடிகளாரின் அகக் கண்களுக்கு அவர் தட்டுப்படவில்லை. அதற்குப் பதிலாக உமையொரு பாகன் அங்கே காட்சியளித்தான். ஓர் அந்தணனாய் ஆண்டு கொண்டான் (திருவாச:235) என்று ஒரிரு இடங்களில் கூறினாரேனும் groortly இடங்களில் எல்லாம் இறைவியோடு வந்து தம்மை ஆண்டதாகவே அடிகளார்