பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தெள்ளேனம் , 89 அந்த் இயல்புகளுள் ஒன்று, எந்த ஒன்றிலும் நிலையில்லா மல் தாவித் திரிதலாகும். குருநாதர் எவ்வளவுதான் அருள் செய்திருந்தாலும், அவர் மறைந்த பிறகு பல்லாண்டுகள் வாழ்ந்த மணிவாசகர் மனம், ஒரோவழி அந்த அருளிப் பாட்டை. மறந்துவிடுதல் இயல்புதானே? அப்படி மறவாமல், ஒரு கணமும் திருவடியின்மேலுள்ள நினைவு நீங்காமல் இருக்குமாறு அருளிச்செய்தார் குருநாதர். அதனையே மறந்தேயும் தன் கழல் நான் மறவாவண்ணம் நல்கினான் என்கிறார். 243. கல் நார் உரித்து என்ன, என்னையும் தன் கருணையினால் பொன் ஆர் கழல் பணித்து ஆண்ட பிரான் புகழ் பாடி மின் நேர் நுடங்கு இடை செம் துவர் வாய் வெள் நகையிர் தென்னா தென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ 9 கல் நார் உரித்தென்ன-கல்லில் நார் உரித்தாலொப்ப. குருநாதர் தம் எல்லை மீறிய கருணையினால் என்னையும் ஆண்டார். எவ்வாறு ஆண்டார்? தம் திருவடிகளைத் தந்து (பணித்து ஆண்டார் என்கிறார். இதைமட்டும் கூறியிருந்தால் அத்திருவடிகளைப் பெறுதற்குரிய தகுதி அடிகளார்மாட்டு இருந்தது என்று நினைக்கத் தோன்றும். திருவடிகளைப் பெறும் தகுதி தம்மாட்டு இல்லாதிருப்பினும், குருநாதர் கருணை காரணமாக அதனைத் தந்தார் என்று கூறிவிட்டார். ஆனாலும் ஒரு சிக்கல் தோன்றுகிறது. குருநாதர் கருணை காரணமாகத் திருவடியைத் தந்திருக்கலாம். அந்தத் திருவடி வந்து தங்குவதற்குரிய நிலைக்களம் அடிகளார்.பால் இல்லையானால் குருநாதர் கொடை, பயனற்றுப் போயிருக்கும். இதே கருத்தை "மழக் கையிலங்கு பொற் கிண்ணம் என்றலால், அரியை என்று உனைக் கருதுகின்றி லேன்' (திருவா:9) என்று முன்னரே அடிகளார் பாடியுள்ளார்.