பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 கையிலுள்ள குச்சியும் அப்படியே இருக்கும். ஆனால், இதன்மேலுள்ள காற்றாடி ஆகிய ஒலை தான்மட்டும் சுற்றுகிறது. அதுபோல ஆன்மா என்பது குச்சியைப் போலவோ அதில் செருகப்பட்ட முள்ளைப் போலவோ இருக்கிறது. அதற்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. குச்சியின்மேலுள்ள (ஒலை) காற்றாடியைப் போன்றது உடம்பின் தோற்றமும் மறைவும். இந்தக் காற்றாடி சுற்றவேண்டுமேயானால் அதன்மேல் காற்று அடிக்க வேண்டும். அதேபோலப் பிறப்பும் இறப்பும் மாறிமாறி வரவேண்டுமானால் அறம் அல்லது பாவம் என்ற காற்றுத் தேவைப்படுகிறது. அறம், பாவம் என்பவற்றைப் ஒரு பிறப்பில் செய்தோர், அதற்கேற்ற மறுபிறப்புப் பெறுவர். அறம் செய்தவர் மறுபிறப்பில் பெருஞ்செல்வராக வாழ்வர் என்று நினைப்பதும் பேசுவதும் பெருந்தவறு. அறம் செய்தவர் மறுபிறப்பில் நல்ல பண்பும், அமைதியான மனமும், ஆன்ம முன்னேற்றமும் உடைய வாழ்வைப் பெறுவர் என்பதே கருத்தாம். என்றாலும், இந்த அறமும் பிறவிக்கு வித்தாகலின் அதுவும் அச்சத்திற்குரியது என்கிறார் அடிகளார். இரண்டாம், மூன்றாம் அடிகளில் இரண்டு கருத்துக் களைக் கூறுகின்றார் அடிகளார். முதலாவது பிறப்பு, இறப்பு என்பவற்றால் ஏற்படும் அச்சத்தைக் குருநாதர் போக்கினார் என்பது. இரண்டாவது, இப்பொழுது எடுத் துள்ள பிறப்பு முடிகின்றவரை என்ன செய்யவேண்டும் என்பதையும் அந்தக் குருநாதர் அருளினார் என்பது. அதாவது இப்பிறப்பில் மறந்தேயும் தன் கழல் நான் மறவாவண்ணம் நல்கினான் என்பதாகும். எவ்வளவு உயர்ந்த நிலையிலும் மனித மனத்திற்கு உள்ள சில இயல்புகளை எளிதாகப் போக்கிவிட முடியாது.