பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தெள்ளேனம் 87 241. ஆ. ஆ அரி அயன் இந்திரன் வானோர்க்கு அரிய சிவன் வா வா என்று என்னையும் பூதலத்தே வலித்து ஆண்டு கொண்டான் பூ ஆர் அடிச்சுவடு என் தலைமேல் பொறித்தலுமே தே ஆனவா பாடித் தெள்ளேனம் கொட்டாம்ோ 7 யாவர்க்கும் அரிய சிவம் பூதலத்தே வந்தது ஒரு புதுமை, வழியோடு சென்றவரை வலிந்து ஆட்கொண்டது மற்றொரு புதுமை ஆட்கொண்டபின் பூவார் திருவடியை அடிகளாரின் தலைமேல் சூட்டியது மூன்றாவது புதுமை. இந்த மூன்றைவிட அதிகம் சிறப்புப் பெறுவது அடிசூட்டப் பெற்றவுடன் திருவாதவூரர் தே ஆனார்’ என்பதாகும். தே என்பது தெய்வம் என்ற பொருளை உடையது; இங்கே சிவத்தைக் குறித்தது. 242. கறங்கு ஒலை போல்வது ஒர் காயப் பிறப்போடு இறப்பு என்னும் அறம் பாவம் என்று இரண்டு அச்சம் தவிர்த்து என்னை ஆண்டுகொண்டான் மறந்தேயும் தன் கழல் நான் மறவாவண்ணம் நல்கிய அத் திறம் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ 8 கறங்கோலை-பனையோலைக் காற்றாடி சிறுவர்கள் கையில் வைத்து விளையாடும் ஒலைக் காற்றாடியில் காற்றுப் பட்டவுடன் நான்கு, பக்கமும் நீட்டிக்கொண்டிருக்கும் ஒலை, வெகு வேகமாகச் சுழல ஆரம்பிக்கும். இந்த நான்கில் ஒரு பக்கத்து ஒலையைப் பார்த்தால் அது ஒரு விநாடி கீழேயும் அடுத்த விநாடி மேலேயும், அதற்கு அடுத்த விநாடி கீழேயும் மாறிச் மாறிச் சுழன்று வரும். இந்தக் காற்றாடியை (ஒலையை)க் கையிலுள்ள குச்சியோடு பொருத்தியிருக்கும் முள் அல்லது ஆணி, எவ்வித அசைவும் இல்லாமல் அப்படியே இருக்கும்.