பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 திருப்பெருந்துறையில் வடிவுடன் அவர் வந்தார்; அவரைக் கண்டோர் பன்னூற்றுவர் ஆயினும், அந்தக் குருநாதர் கருவெந்து வீழக் கடைக்கணித்தது அடிகளார் ஒருவரையே ஆகும். 240. அரை ஆடு நாகம் அசைத்த பிரான் அவனியின்மேல் வரை ஆடு மங்கைதன் பங்கொடும் வந்து ஆண்ட திறம் உரை ஆட உள் ஒளி ஆட ஒள் மா மலர்க் கண்களில் நீர் திரை ஆடுமா பாடித் தெள்ளேனம் கொட்டாமோ 6 அசைத்த-கட்டிய. இப்பாடலின் இறுதிப் பகுதி திருப்பெருந்துறை நிகழ்ச்சியை ஆறு சொற்களில் வடித்துக் கூறுகிறது. அவையாவன உரை ஆட, உள்ளொளி ஆட, (கண்களில்) நீர்த்திரை ஆட என்பவையாம். உரையாடல் என்றால் இருவர் தம்முள் பேசிக் கொள்ள வேண்டும். ஆனால், திருப்பெருந்துறையில் குருநாதர் மட்டுமே பேசினார்; அதுவும் மூன்று வார்த்தைகள்தான் பேசினார். அவை ‘கோலமார்தரு பொதுவினில் வருக' (திருவாச2-128)என்ற சொற்களேயாம். இந்த மூன்று சொற்களும் அடிகளாரின் மும்மலத்தையும் ஒரே விநாடியில் சுட்டெரித்துவிட்டன. அதன் { ՔtԼ1&ծ] fi Յ; (சித்தத்தின்) உள்ளே ஒளியாடத் தொடங்கியது. அதன் பயனாகக் கண்களில் நீர்த் திரையாடத் தொடங்கியது. இப்பொழுது ஒர் ஐயம். குருநாதரின் வார்த்தைகள் அடிகளாரின் கண்ணிரை வரவழைத்தனவா? இல்லை என்று உறுதியாகக் கூறலாம். பொதுவினில் வருக என்ற சொற்கள் ஒர் ஆணையாக அமைந்தனவே தவிர, உணர்ச்சியைத் தூண்டிக் கண்ணிரை வரவழைக்கும் சொற்களல்ல அவைகள். அப்படியானால் கண்ணிர் வருவதற்குக் காரணம் உள்ளொளியே என்க.