பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தெள்ளேணம் 85 சிரிப்பிற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அரிக்கும் பிரமற்கும் அரிய சிவம், ஒரு மனிதரை ஆட்கொண்டது என்றால் சிரிப்பிற்கு அது முதற் காரணம். நின்ற சிவம் வந்து உருக்கிப் பணிகொண்டது என்பது இரண்டாவது காரணம. 238. அவம் ஆய தேவர் அவ கதியில் அழுந்தாமே பவ மாயம் காத்து என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி நவம் ஆய செம் சுடர் நல்குதலும், நாம் ஒழிந்து சிவம் ஆனவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ 4 அவமாய-பயனற்ற. அவகதி-கீழ்நிலை. பவமாயம்-பிறவிக்கு ஏதுவாகிய வஞ்சனை. நவம்-புதுமை. - எத்துணை உயர்ந்த தேவர்களும் பிறவிப் பெருங்கடலை நீந்தாதவரே ஆவர். அப்படியிருக்க, சாதாரண மனிதராகிய தம்மை, பரஞ்சோதி இழுத்து, பிறவாமல் காத்து, தன் அருட் சுடரில் ஒரு பகுதியைத் தந்ததால், அடிகளார் தம் மாத்திரையில் அரை மாத்திரை குறுகியதாகச் சொல்கிறார். அதாவது சீவன் சிவனான வரலாறு இதுவேயாகும். 239. அருமந்த தேவர் அயன் திருமாற்கு அரிய சிவம் உருவந்து பூதலத்தோர் உகப்பு எய்தக் கொண்டருளிக் கரு வெந்து வீழக் கடைக்கணித்து என் உளம் புகுந்த திரு வந்தவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ 5 திரு-சிவஞானத் திரு. ‘தேவர் அயன் திருமாற்கு அரிய சிவன் ஒரு வடிவு கொண்டு, அவ்வடிவைக் கண்டோர் மகிழ்ச்சியடைய பூ தலத்தே வந்தான். அத்தகைய ஒருவன் அடிகளாரை இனிப்பிறவாமல் காத்தான்.