பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 நேரங்களில் செய்யவில்லை. அதனையே 'கருவேர் அறுத்தபின் யாவரையும் கண்டதில்லை’ என்று பாடுகின்றார். யாவரையும் என்று உயர்திணை வாய்பாட்டால் கூறினாரேனும் யாவையையும் என்ற அஃறிணையும் அதனுள் அடங்கும். 237. அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் தெரிக்கும் படித்து அன்றி நின்ற சிவம் வந்து நம்மை உருக்கும் பணி கொள்ளும் என்பது கேட்டு உலகம் எல்லாம் சிரிக்கும் திறம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ 3 தெரித்தல்-அறிவித்தல். - இப்பாடலின் முதலிரண்டு அடிகள் இறைவனது மிக்குயர்ந்த நிலையையும், மிகுதியும் எளிவந்த நிலையையும் அடுத்தடுத்துப் பேசுகின்றன. நின்ற சிவம்' என்ற சொல் சிந்தனைக்குரியது. ஒரு பொருள் ஆடிக்கொண்டோ அசைந்துகொண்டோ ஒடிககொண்டோ இருக்குமாயின், அதன் இயல்பை முழுதுமறிதல் கடினம். அவ்வாறின்றி ஒர் இடத்தில் அப்பொருள் அசையாது நிற்பின் அதனைப் பெரிய அளவில் அறிந்துகொள்வது எளிது. எவ்வித அசைவும் இல்லாமல் நின்றுகொண்டிருக்கின்ற ஒரு பொருளை அரி, பிரமன், தேவர்கள் ஆகியோர் (எத்தகையது) என்று தெரிந்துகொள்ளாமற்போனது வியப்பே ஆகும். இதனை உலகோர் நன்கறிவர். அப்படி அசையாது நின்ற பொருள், இப்பொழுது ஒரு மனிதரைத் தேடிவந்து, அவருடைய மனத்தை உருக்கிப் பணிகொண்டது என்பதைக் கேட்ட உலக மக்கள், சிரிப்பதில் ஒன்றும் வியப்பில்லை அல்லவா?