பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தெள்ளேணம் 83 236. திரு ஆர் பெருந்துறை மேய பிரான் என் பிறவிக் கரு வேர் அறுத்தபின் யாவரையும் கண்டது இல்லை அரு ஆய் உருவமும் ஆய பிரான் அவன் மருவும் திருவாரூர் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ 2 இப்பாடலில் இரண்டாவது அடியில் வரும் யாவரை யும் கண்டதில்லை' என்ற தொடர் சிந்தனைக்குரியது. 'பெருந்துறை மேய பிரான் பிறவிப்பிணியை அடியோடு களைந்தான். அது போனபிறகு இந்த உடலும், அதிலுள்ள கருவி கரணங்களும் இறையனுபவம் ஒன்று தவிர வேறு எதிலும் ஈடுபடவில்லை. கண்கள் எதிரே உள்ளவற்றைக் காண்கின்றன. காண்கின்றன என்று சொல்வதுகூடச் சரி யில்லை. எதிரே உள்ள பொருட்கள் கண்ணில் படுகின்றன. ஆனால், அவை யாவை என்று பகுத்தறியும் மனநிலை போய்விட்டதால், பொருள்களை இனங்காணும் சூழ்நிலை அங்கு இல்லை. பெரிய மகான்களுடைய கண்களைப் பார்த்தவர் களுக்கு இது நன்கு விளங்கும். அக்கண்கள் எதிரே உள்ள நம்மைப் பார்ப்பதுபோல் தோன்றினாலும் உண்மையில் அவர்கள் நம்மைப் பார்ப்பதில்லை. எங்கோ சென்று லயித்திருக்கின்ற மனம், கண்ணாகிய பொறியுடன் சேராததால், அந்தப் பார்வை சூனியப் பார்வையாக ஆகிவிடுகிறது. திருவாதவூரராக இருந்தவரையில், அரசன் முதல் அனைவரையும் இனங் கண்டுகொண்டிருந்தார் அடிகளார். பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பிறகு எதிரே உள்ளதை இனங் காணும் சக்தி அவரைவிட்டுப் போய்விட்டது. திருவாதவூரரின் பிறவியின் மூலத்தைப் பெருந்துறையான் வேரோடு அறுத்துவிட்டான் அல்லவா? அந்தப் பழைய பிறவியில் உடம்போடு சேர்ந்திருந்த இப்பொறி, புலன்கள் இப் புதுப்பிறவியில் தமக்குரிய பழைய பணிகளைப் பல