பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 வடிவு என்பது தூரத்தே உள்ளே ஒருவாை மனிதன் என்ற அளவில் அறிந்துகொள்வதாகும். உருவு என்பது குறிப்பிட்ட இன்னார் என்று அறிந்து கொள்வதாகும். திருமால் காணமுடியாத வடிவு, இப்பொழுது அந்தணக் கோலத்தில் காட்சியளிக்கிறது. புறக் கண்களால் அவ்வடிவைக் கண்டுகொண்டிருக்கும்போதே, அகக் கண்கள் உமையொரு பாகனைக் காண்கிறது. அடுத்த சில கணங்களில் அதையும் கடந்து அண்டமும் சிறிதென்னும் படியாகப் பெரியவனாக நிற்கும் நிலை தெரிகிறது. அடுத்த சில கணங்களில் இல் நுழை கதிரின் துன் அணுப் புரைய’ச் (திருவாச:3-5) சிறிய வடிவம் காட்சியளிக்கிறது. அப்படியானால் இதில் எது அவன் வடிவம் ? பல்வேறு வடிவுகளில் உள்ள இப்பொருளுக்கு என்ன பெயர் கொடுப்பது? எந்தப் பெயர் அல்லது எந்த வடிவம் கொடுத்தாலும் அதனுள்ளும் அதனைக் கடந்தும் நிற்கின்ற பொருளுக்கு என்ன பெயர் கொடுப்பது? எந்த வடிவைக் கற்பிப்பது? இத்தனை வடிவங்களைக் கண்டாரே, அவற்றுள் எது அவனுடைய உண்மையான வடிவம்: எல்லாவற்றையும் ஊடுருவியும் கடந்தும் நிற்கும் பொருளுக்கு, எந்தப் பெயர் கொடுத்தாலும் பொருந்தும் என்ற உண்மையை உணர்ந்த அடிகளார் ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேனம் கொட்டாமோ என்கிறார். திருமால் பன்றியாய் சென்று உணராச் சேவடி’ என்றது காண்பேன் என்ற எண்ணத்துடன் அவன் தருக்கிச் சென்றமையைக் குறிக்கின்றது. எனவே அவன் காணுமாறில்லை. காணவே முடியாத அந்தப் பொருளை உணர்தல் எங்ங்னம்? எனவே உணராச் சேவடி என்றார்.