பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தெள்ளேனம் 81 இங்குப் பயன்படுத்தப்பெற்ற 'அறிய’ என்ற சொல்லைச் சிந்தித்தல் வேண்டும். காண்டல் வேறு, அறிதல் வேறு. 'உரு நாம் காண’ என்று பாடியிருக்கலாம். அப்படியில்லாமல் உரு நாம் அறிய' என்று சொல்லியதன் நோக்கமென்ன? கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை' (திருவாச:372) என்று பாடியுள்ளாரே! திருவடியைக் காணலாமே தவிர அதன் இயல்பை அறியமுடியாது என்றுதானே இவ்வடியில் கூறியுள்ளார்? அப்படியிருக்க, உரு நாம் அறிய' என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? சற்று நின்று நிதானித்தால் ஓரளவு இதனை விளங்கிக்கொள்ள முடியும். உரு நாம் அறிய ஒர் அந்தணனாய் ஆண்டு கொண்டான்' என்பதுதானே அடிக ளாரின் வாக்கு? குருநாதர் ஒர் அந்தண வடிவங் கொண்டு குருந்த மரத்தடியில் இருந்ததைத்தானே கண்டார்? 'நாமறிய” என்ற சொல்லைத் தனியே எடுத்துவிட்டு, ஒர் அந்தணனாய் உரு ஏற்று (வடிவெடுத்து) ஆண்டு கொண்டான் என்று கூறினால், பெருந்துறையில் நிகழ்ந்த புற நிகழ்ச்சியைக் கூறியதாகும். இது அடிகளாரின் காட்சி அளவையில் முற்பகுதியில் நடைபெற்ற ஒன்றாகும். ஒரு சில விநாடிகளில், அந்தண வடிவம் மறைந்து, உமையொருபாகன் அகக் காட்சி தந்தான் அல்லவா? அந்த அடிப்படையில்தானே அடிகளார், புவனியில் சேவடி தீண்டிய குருநாதரைச் சிவனெனத் தேறினார்? (திருவாச:36). ஆக, குருநாதர் வடிவில் மறைந்திருக்கும் மூலப் பொருளை புறக் கண்களால் காணாவிடினும் அகக் கண்ணால் கண்டார் அன்றோ! அதனாலேயே அந்தண உரு(வை) நாம் அறிய' என்று கூறினார். இப்படி வடிவும் உருவும் கூறிய பிறகு, அடுத்த அடியில் ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றும் இல்லாதவன்’ என்பது எப்படிப் பொருந்தும்?