பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 திருவாசகம் - சில சிந்தனைகள் - தெள்ளேணம், அம்மானை பேர்ன்ற பாடல்களின் அவற்றை விரும்பி பாடினர். இசையமைப்புப் பொருத்தமாக இருந்தமையின் அச்சிறுமியர் இசையமைப்பில் ஈடுபாடு கொண்டு பாடும் சிறுமியர் மிக உயர்ந்த கருத்துள்ள திருவாசகப் பாடல்களை, அடிக்கடி பாடுவார்களேயானால் நாளாவட்டத்தில் அவர்களையும் அறியாமல் பாடல் கருத்துக்கள் அவர்கள் மனத்தில் சென்று தங்கிவிடும். காலம் செல்லச் செல்ல இக்கருத்துக்கள் அவர்கள் வாழ்க்கையையே ஒரளவு மாற்றும் ஆற்றல் உடையன. அவ்வாறு அவர்கள் பயன் பெறும்போது அடிகளாரின் குறிக்கோள் நிறைவேறி விடுகிறது. 235. திருமாலும் பன்றியாய்ச் சென்று உணராத் திருவடியை உரு நாம் அறிய ஒர் அந்தணன் ஆய் ஆண்டுகொண்டான் ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ 1 இப்பாடலின் முன்னிரண்டு அடிகளும், பின்னிரண்டு அடிகளும் முரண்பட்ட பொருள்களைத் தருவனவாகும். முதலடி திருமால் வராக அவதாரம் எடுத்து, மண்ணைப் பிளந்துகொண்டு காண முற்பட்டபோதும் காணமுடி யாமல், அதனினும் கீழே சென்ற திருவடி என்பதாகும். திருவடியைத் திருமாலேகூடக் காணமுடியவில்லை. காணமுடியாத திருவடிக்கு வடிவு கற்பித்தல் இயலாத காரியம். எனவே, அத்திருவடி எத்தகையது? என்ன வடிவும், என்ன நிறமும் பெற்றிருந்தது என்ற வினாக் களுக்கு இடமேயில்லை. திருமாலாலும் காணமுடியாத திருவடி, தன் வடிவைச் சுருக்கிக்கொண்டு அடிகளார் அறியும்படி காட்சி தந்தது.