பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தெள்ளேணம் 79 போலும், பெண்கள் அடித்து வாசிக்கும் கருவிக்குத் தெள்ளேனம் என்ற தனியான பெயர் இருந்திருக்கும் போலும். எனவே, பெண்களுக்குரிய வாத்தியமாக அது அமையும்போது, தெள்ளேணம் என்றும் ஆண்களுக்கான வாத்தியமாக அமையும்போது, சிறுபறை என்றும் வெவ்வேறு பெயர்களைப் பெற்றிருக்கலாம். ஏனம் (பாத்திரம்) என்ற சொல் ஏன என்று இரண்டு சுழி னகரத்தைப் பெற்றுவருவது காலாந்தரத்தில் ஏற்பட்ட மாறுதலாகும். பொதுவாக எந்த ஏனமும் அடிப்பகுதி மூடப்பெற்று மேற்பகுதி திறந்திருக்கும். இது சிறு பறையாகச் செய்யப்பெறும்போது அடிப்பகுதி திறந்திருக்க மேற்பகுதி பதப்படுத்தப்பட்ட மெல்லிய தெளிவான தோலால் மூடப் பெற்றிருத்தலின் 'தெள் ஏனம்’ எனப் பெயர் பெற்றது போலும். சிறுபறை போன்ற கருவியைக் கையில் வைத்துக் கொண்டு, அதனைக் கையால் தட்டி வாசித்தலையே தெள்ளேணம் கொட்டாமோ என்று அடிகளார் பாடியுள்ளார் என்று பொருள்கொள்வது ஒரு புதிய சிந்தனையாகும். திருவாசகத்தின் 1.1ՓՆ} பகுதிகளை, சிறுமியரின் விளையாடல்களை மனத்துட்கொண்டு, அடிகளார் பாடி யுள்ளார் என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். மிக உயர்ந்த கருத்துடைய அனுபவப் பிழிவான பாடல்களை, மிக எளிய சொற்களில், சிறுமியர்க்கு முன்னரே பழக்கப்பட்ட இசையமைப்பில் தந்துள்ளமை அடிகளாரின் கருணைத் திறமாம். இத்தகைய இசையில் ஈடுபட்டு சாதாரணப் பொருளுள்ள பாடல்களை அல்லது பொருளே இல்லாத பாடல்களை அச்சிறுமியர் பாடி வந்தனர். அவர்கள் விளையாடும் விளையாட்டிற்கு