பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 திருவாசகம் - சில சிந்தனைகள் - திருமாலும் பன்றியாய்ச் சென்றுணாத் திருவடியை (திருவாச 235) கனவேயும் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் (திருவாச: 244) என்று வரும் பகுதிகள் இந்த ஒைைசயை நினைவூட்டுகின்ற எடுத்துக்காட்டுகளாகும். ஒவ்வொரு சீருக்கும், இடப்புறமோ வலப்புறமோ முறம் அசைவதைக் கற்பனையில் காணலாம். தெள்ளேனம் என்ற சொல்லுக்கு முந்தையோர் கூறிய உரையையும் தழுவி எழுதப்பெற்றதாகும் இப்பகுதி. தெள்ளேணம் என்றுமட்டும் சொல்லாமல் 'தெள்ளேணம் கொட்டாமோ என்று அடிகளார் கூறுவதால் மனத்தில் ஒரு நெருடலை இத்தொடர் உண்டாக்கிற்று. இதேபோலத் தோணோக்கம்' என்ற சொல்லைமட்டும் பயன்படுத்தாமல் தோணோக்கம் ஆடாமோ என்று கூறுவதால், அது இடம் பெயர்ந்து ஆடும் ஒருவகை ஆட்டம் என்ற கருத்தைத் தோற்று விக்கின்றது. அதேபோலத் தெள்ளேணம் என்ற சொல்லைத் தனியே வைத்துக்கொண்டுதான் மேலே கூறிய முறையில் பொருள் காணப்பெற்றது. அதனாலேயே தெள்ளுதல், புடைத்தல் முதலிய கருத்துக்கள் இடம்பெற்றன. ஏணம் கொட்டுதல் என்ற இரண்டு சொற்களையும் சேர்த்துப் பொருள்கொண்டால் கையில் அடித்து வாசிக்கும் சிறு பறை என்ற பொருளைத் தருமோ என்று எண்ணத்தோன்றுகிறது. கொட்டுதல் என்ற சொல்லுக்குக் கையாலோ அல்லது கம்பாலோ அடித்து வாசித்தல் என்ற பொருளே உண்டு. பிற்காலப் பிள்ளைத் தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் சிறுபறைப் பருவத்தில் சிறுபறை முழக்கி அருளே’ என்றுவரும் பகுதிகள் அடிகளாரின் 'தெள்ளேனம் கொட்டாமோ என்பதிலிருந்து தோன்றியன