பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. திருத்தெள்ளேனம் (சிவனோடடைவு) திருக்கோத்தும்பியை அடுத்துள்ள இருபது பாடல்கள் 'தெள்ளேணம் கொட்டாமோ' என்று முடிவதால், இப்பகுதிக்குத் திருத்தெள்ளேனம் என்று தலைப்புத் தரப்பெற்றுள்ளது. தெள்ளேனம் என்பதன் பொருள் நன்கு விளங்குமாறில்லை. அதெந்துவே (திருவாச. 458 என்பது போன்ற L_{{*} புதிய சொற்கள் திருவாசகத்தில் இடம்பெற்றுள்ளன. தெள்ளுதல் என்ற சொல் இன்றும் கிராமப்புறங்களில் வழங்கிவருகிறது. அரிசியில் கலந்துள்ள கல்லைப் போக்கு வதற்கு, அதனை முறத்தில் கொட்டி, இரண்டு கைகளாலும் முறத்தைப் பிடித்துக்கொண்டு, இடமும் வலமுமாக அசைத்தலை, நேம்புதல், கொளித்தல், தெள்ளுதல் ஆகிய பல சொற்களால் கிராமத்தார் இன்றும் கூறுகிறார்கள். இது புடைத்தலிலும் மாறுபட்டது. புடைத்தல் மேலும் கீழுமாக முறத்தை ஆட்டுவதாகும். அவ்வாறு புடைக்கும்போது அரிசியுடன் சேர்ந்துள்ள பதர், உமி என்பவை இந்த அசைவின் விளைவாக முறத்தின் முன்னே தள்ளப்படும். அடிகளார் தெள்ளேணம் என்று பாடியுள்ள பகுதி, அப்பாடலின் ஒசை நயம்பற்றிக் கொடுக்கப்பட்ட தலைப்போ என்று ஐயுறவேண்டியுள்ளது. உரலில் விழும் உலக்கை இடிக்கேற்ப, ஒரு சந்தம் அமைத்துப் பொற்சுண்ணப் பாடல்களைப் பாடியதுபோலக் குறிப்பிட்ட ஒர் இசையை அடிப்படையாகக் கொண்டு தெள்ளேணம் பாடப்பட்டதுபோலும்.