பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 அன்று. அடிகளார் பயன்படுத்திய இறுமாப்பு என்ற சொல். வெற்றியால் பெற்ற கர்வம் என்ற பொருளைத் தராது; இங்கே இறுமாக்க் என்ற சொல் பெருமிதம் என்ற பொருளையே தந்துநிற்கும். நாவரசரின் இறுமாந்திருப்பன் கொலோ’ என்ற தொடருக்கும் இவ்வாறே பொருள் கொள்ள வேண்டும். அயனும் மாலும் இம்முயற்சியில் தோற்றார்கள் ஆயினும், அவர்கள் பெருமையைக் குறைக்க விரும்பாத அடிகளார் பூமேல் அயனொடு மால்' என்றார். அவர்களுக்குக் கிட்டாத ஒன்று தமக்குக் கிட்டியிருப்பினும் அதனால் கர்வம் கொள்ளாமல் ‘அடியேன்” என்ற சொல்லால் தம்மைக் குறிக்கின்றார். அகந்தை இல் வழி அவர்கள் இருவருக்கும் கிடைத் திருக்கவேண்டிய திருவடிப் பேறு, தகுதியில்லாத தமக்குக் கிடைத்ததை நாய்மேல் தவிசிட்டு' என்றார். @ & &