பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 75 இருந்த அடிகளார். இதனை நன்கு அறிவார் ஆதலின், அவன் காதுகளின் பக்கத்தில் சென்று இந்த வண்டுகள் முறையிட்டுவிட வேண்டா என்று எச்சரிப்பவர்டோலத் 'தெள்ளுங் கழலுக்கே சென்றுதாய்’ என்று ஏகாரம் கொடுத்துப் பாடுகிறார். 234. பூ மேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க நாய் மேல் தவிசு இட்டு நன்றாய்ப் பொருட்படுத்த தீ மேனியானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பி 20 பொருட்படுத்த-பொருளாகச் செய்த. இப்பாடலின் முதலிரண்டு அடிகள் தனிச் சிறப்புடை யன. மாலும் அயனும் அடியையும் முடியையும் தேடிச் சென்றனர். எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு அப்பணியைத் தொடங்கினர். ஆனாலும், அம்முயற்சி வெற்றிபெறவில்லை.

'ஏமாறி நிற்க என்ற தொடர் ஆழமான பொருளுடையது. ஏமாறும் செயல் எப்பொழுது நிகழும்: ஒன்றை எதிர்பார்த்து இருந்தவனுக்கு அது கிடைக்காத போது ஏமாற்றம் ஏற்படும். நான்முகனும் மாலும் தங்கள் அகந்தை d#5f7 f7 655İ LOfT95 எப்படியாவது முடியையும் அடியையும் கண்டுகொள்வோம் என்று எதிர்பார்த் திருந்தனர். ஆனாலும், கடைசியில் ஏமாற்றமே எஞ்சியது. ‘அடியேன் இறுமாக்க என்றதால் இவர்களோடு ஒப்பவைத்துத் தம்மை எண்ணி, அவர்களுக்குக் கிட்டாதது தமக்குக் கிட்டியது என்ற கருத்தில் இறுமாந்தார் என்று பொருள் கொள்வது அவ்வளவு பொருத்தமுடையது