பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 என்றாலும், தங்கிய பிறகு தம்மைப்பற்றிக் கவலையே கொள்ளவில்லை என்கிறார். அடிகளாரின் உள்ளத்தில் ஒன்றிரண்டல்ல, எத்தனையோ துயரங்கள் குடிகொண்டுள்ளன. இவ்வளவு கருணையோடு வந்து தங்கியவன், உள்ளத்திலுள்ள நூற்றுக் கணக்கான துயரங்களில் ஒன்றைக்கூட ஒழிக்க முற்படாமல் இருப்பது என்ன நியாயம் என்பதை, ஏ வண்டே அவன் திருவடிகளில் சென்று கூறுவாயாக' என்று முடிக்கின்றார். இப்பாடலில் ஒர் அழகு அமைந்துள்ளது. உள்ளத்தில் உற்ற துயர் ஒன்றைக்கூடப் போக்கவில்லை என்ற முறையீட்டைத் தலைவனிடம் சென்று சொல்லும்போது, அவன் காதுகளில் அல்லவா சொல்லவேண்டும், அதை விட்டுவிட்டுக் கழலுக்கு சென்று தாய்’ என்று கூறுவதன் நோக்கம் என்ன? இந்த நோக்கம் இரு வகைப்படும். இவரை ஆட்கொண்டு மணிவாசகராக மாற்றியது குருநாதரின் திருவடியே ஆகும். தமக்குப் புனர்வாழ்வு அளித்த அத்திருவடியின்மேல் கொண்ட காதலால், திருவடியை உடையானிடம் சொல்ல வேண்டியதை திருவடியினிடமே சொல்லுக' என்று கூறுவது முதல் நோக்கம். இரண்டாவது ஒன்றுண்டு. மிகப் பெரிய அரசர்களிடம் தம் குறைகளைச் சொல்லச் செல்லும் குடிமக்கள் அரசரிடம் நேரிடையாகவோ அல்லது அவரின் காதின் பக்கத்திலோ சென்று சொல்ல முடியாது. அரசருடைய கால்அடியில்தான் குடிகள் நிற்கவேண்டும். குடிமக்கள் கூறுவதை அரசரிடம் எடுத்துச்சொல்லும் உரிமை அரச அலுவலர்களுக்கே உண்டு அமைச்சராக