பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 73 பொய்யாய-அழிந்துவிடுவதாகிய, அழுந்தி-அதுவே நமக்கு எல்லாம் என்று எண்ணி. இப்பாடலின் பொருள் வெளிப்படை 232. தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும் பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும் சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ 18 உமையொரு |ԼԱII 5 வடிவத்தைக் கூறுவதாகும் இப்பாடல். 233. கள்வன் கடியன் கலதி இவன் என்னாதே வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே உள்ளத்து உறு துயர் ஒன்று ஒழியாவண்ணம் எல்லாம் தெள்ளும் கழலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ 19 கடியன்-கொடியன். கலதி-கீழ்மகன். "வள்ளல் தன்மை உடையவனாகிய இறைவன், நான் கள்ளமாகிய வஞ்சத் தன்மை உடையவன், உருகாத கடினச் சித்தம் உடையவன், தீக்குணமுடையவன் என்பதுபற்றி ஒரு சிறிதும் கவலையுறாமல் மெள்ள மெள்ள வந்து என் உள்ளத்துள் புகுந்தான்’ என்றவாறு. 'வந்தொழிந்தான்’ என்ற தொடர் வந்து தங்கி விட்டான் என்ற பொருளைத் தருவதாகும். பாடலின் மூன்றாம், நான்காம் அடிகள், வண்டைத் துதாக அனுப்பும் முறையில் அமைந்துள்ளன. வண்டினி டம் என்ன சொல்லுகின்றார்? தம் மனத்திடை வந்து தங்கியவன் வந்தபோது வள்ளல் தன்மையோடு வந்தான்