பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 230. உள்ளப்படாத திருஉருவை உள்ளுதலும் கள்ளப்படாத களி வந்த வான் கருணை வெள்ளப்பிரான், எம்பிரான், என்னை வேறே ஆட் கொள் அப்.பிரானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பி 16 உள்ளப்படாத-கரணங்களால் அறியமுடியாத, கள்ளப்படாதவெளிப்பட்ட. இப்பாடலின் முதலடி இறைவனை எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறது. இறைவனுக்கு நாம் தற்பிக்கும் வடிவை நம்முடைய எண்ணம், சொல், கற்பனை என்பவற்றுள் கொண்டுவர முடியும். ஆனால் அவ்வடிவு நாம் கற்பிக்கும் வடிவே தவிர அவனுடைய உண்மையான சொரூபமன்று. இதனையே, 'உள்ளப்படாத திருவுரு என்கிறார். ஆனால் எண்ணம், சொல், கற்பனை மூன்றையும் கடந்து ஆழத்திலுள்ள அடிச்சித்தத்தில் அவனை உள்ளத் தொடங்கினால், அத்தகையவருக்கு ஒளிக்காமல் தன் சொரூபத்தைக் காட்டுவான் என்க. ‘என்னை வேறே ஆட்கொள்ள என்ற தொடரிலுள்ள "வேறே. என்ற சொல் சிந்திக்கத்தக்கது. நூற்றுக் கணக்கானவர் உடனிருந்தும், என்னை அக்கூட்டத்தி லிருந்து தனியே பிரித் தெடுத்து ஆட்கொண்டான் என்ற கருத்தையே வேறே என்ற சொல்லில் பெறவைக்கிறார். 231. பொய் ஆய செல்வத்தே புக்கு அழுந்தி நாள்தோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட ஐயா என் ஆர் உயிரே அம்பலவா என்று அவன் தன் செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பி 17