பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி - 71 ராக இருந்த பழைய நிலையும், மணிவாசகராக மாறிய, புதிய நிலையும் இரண்டு துருவங்கள்போல் அவருக்குக் காட்சியளிக்கின்றன. எங்கோ இருந்த நான், இப்பொழுது இந்த நிலையை எப்படி அடைந்தேன் என்று வியக்கின்றார். இக்கருத்தே பாடலின் முதலிரண்டு அடிகளில் பேசப்பெறுகிறது. அமைச்சராக இருந்தபொழுதேகூட, சிறந்த பக்தரா கிய இவர், ஆலவாய்ச் சொக்கன்மேல் அன்பு பூண்டு அவனே யாவர்க்கும் தலைவன் என்று எண்ணியிருந்தது உண்டு. பதவிக்கேற்பப் பல துறைகளில் ஈடுபட்டிருந்த இவருடைய சிந்தை என்பது, நாயகன்பற்றிய நினைவில் எவ்வளவு தூரம் தோய்ந்தது என்று சொல்வதற்கில்லை. ஆனால், ஆட்கொள்ளப்பட்ட பிறகு அதே உள்ளம் முற்றிலுமாக நாயகனிடம் ஆட்பட்டுவிட்டது. இக்கருத் தையே தாழ் சடையோன் ஆண்டிலனேல் நானும் என் சிந்தையும் நாயகனுக்கு எவ்விடத்தோம்' என்று பாடுகிறார். இவர் ஆட்கொள்ளப்பெற்றது திருப்பெருந்துறையிலா கும். திருப்பெருந்துறையில் அந்தண வடிவுடன் இருந்த குருநாதர் துறவுக் கோலத்தில்தானே இருந்தார் ? அவர்தானே திருவடி தீட்சை செய்து ஆட்கொண்டார்? அப்படியிருக்கத் தானும் தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்’ என்று பாடுவதன் நோக்கமென்ன? அடிகளாருக்கு அகக் காட்சி, புறக் காட்சி என்ற இரு வகைக் காட்சிகளைக் குருநாதர் நல்கினார் என்று முன்னர்க் கூறினோமல்லவா? அது இங்கே நிறுவப் பெறுகிறது.