பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 என்பது பெண்ணை ஒதுக்கிய கோலம் என்று பலரும் நினைக்கின்றோம். அன்றும் இப்படி நினைத்தவர்கள் பலர் உண்டுபோலும். இவ்வளவு ஏன்? அடிகளாரேகட. அவ்வாறு நினைத்திருத்தல் கூடும். அவ்வெண்ணம் தவறானது. கோலத்தைக் கொண்டு எந்த முடிவிற்கும் வரக்கூடாது என்பதை அறிவிக்கவே, இறைவன் இக்காட்சியை நல்குகின்றான். ஆண், பெண் வேறுபாடு புற உடம்புபற்றியதே தவிர, ஆன்மாபற்றியது அன்று. எல்லாவற்றிலும் அருவாய் இருக்கும் இறைவன், ஒரு குறிப்பிட்ட கோலத்தில் இருக்கமாட்டான் என்று நினைப்பது தவறு என்பதைக் காட்டவே ஒரு நேரத்தில் அடிகளாருக்கு இந்த இரண்டு காட்சிகளும் கிட்டின. 229. நானும் என் சிந்தையும் நாயகனுக்கு எவ் இடத்தோம் தானும் தன் தையலும் தாழ் சடையோன் ஆண்டிலனேல் வானும் திசைகளும் மா கடலும் ஆய பிரான் தேன் உந்து சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பி 15 உந்து-வெளிப்படுக்கின்ற. சென்ற பாடலில் சொல்லப்பட்ட அதே கருத்து இன்னும் சற்று விரிவாக இங்குப் பேசப்பெறுகிறது. துரம் தாண்டுதல், பந்தய ஓட்டம் என்பவற்றில் ஈடுபடுபவர்கள் சிலரிடை சில சமயங்களில் இத்தகைய எண்ணம் தோன்று வதுண்டு. ஏதோ ஒர் உந்துசக்தி காரணமாகச் சாதாரண நிலையில் தங்களால் முடியாத ஒன்றை, இப்பொழுது இவர்கள் சாதித்துவிடுகின்றனர். சாதனை முடிந்த பிறகு பின்னோக்கிப் பார்க்கின்றனர். நானா இதனைச் செய்தேன்!” என்று அவர்களே ஆச்சரியப்படுகின்றனர். திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பிறகு அடிகளாருக்கே மேலே கூறப்பெற்ற மனநிலை தோன்றுகிறது. திருவாதவூர