பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 69 கருவாய்' என்று கொண்டுகட்டுச் செய்தால் பொருள் எளிதாக விளங்கிவிடும். ஆலமரத்தின் சிறிய விதையிலிருந்து மாபெரும் மரம் தோன்றுகிறது. அதேபோல, பிரபஞ்சத் தோற்றத்திற்குக் காரணமாகவுள்ள இறைவன், இப்பிரபஞ்சத்தைத் தன்னுள் அடக்கிய விதைபோல இருக்கின்றான். பொறி, புலன்களுக்கும் அறிவுக்கும் கற்பனைக்கும் பிரபஞ்சத்திற்கும் அப்பால், கருவாக இருந்த ஒருவன், இப்பொழுது வடிவுகொடு வருகிறான். இது திருப்பெருந்துறை நிகழ்ச்சியையே குறிக்கின்றது. அடிகளாரைப் பொறுத்த வரை குருநாதர் வடிவிலிருந்த இறைவன் இரண்டு காட்சிகளை நல்குகிறான். ஒன்று புறக் காட்சி, மற்றொன்று அகக் காட்சி. புறக் காட்சியில் 'மறை பயில் அந்தணனாகக்' காட்சியளித்தான். அந்த வடிவுடனேயே ஆட்கொள்ளவும் செய்தான். அடிகளாருக்குமட்டு மல்லாமல் ണ്ണrഞങ്ങ് யோருக்கும் புறக்கண்ணாலும் காணக்கூடிய வடிவாய் அமைந்தது மறைபயில் அந்தண வடிவம். இந்தப் புறக் காட்சியை அடிகளார் கண்டுகொண் டிருக்கும்போதே அவருள் அகக் காட்சி கிடைக்கின்றது. அதில் மருவார் மலர்க்குழல் மாதினொடும் காட்சியளித் தான். என்ன அதிசயம்! பலரும் காணும் நிலையிலிருந்த காட்சி வேறு; அடிகளார் அக மனத்தில் கிட்டிய காட்சி வேறு. இவை ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. ஒன்று துறவுக் கோலம் கொண்ட குருநாதர் வடிவம். மற்றொன்று மலர்க்குழல் மாதொடும் தோன்றிய திருவுருவம். முரண்பட்ட இந்த இரு காட்சிகளையும் ஒரே பாடலில் வைத்து ஏன் பா. வேண்டும்? எட்டாம் நூற்றாண்டில்மட்டு மல்லாமல் இன்றும்கூட இந்த வேறுபாடு பெரிதாகக் கருதப்படுகிறது. துறவுக் கோலம்