பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 'எனக்கு அவனிடத்து அன்பில்லை என்ற ரகசியத்தை நாங்கள் இருவர்மட்டுமே அறிவோம். ஆனாலும் அவன் குருநாதர் வடிவில் என்னைப் பிடித்து ஆட்கொண்டதைச் சுற்றி நின்றவர்கள்மட்டும் அல்லாமல் ஏனையோரும் அறிவர் என்னை ஆட்கொண்டதைக் கண்ட சுற்றி நின்றவர்கள், அவனிடம் எனக்கு அன்பு ஏதோ பெரிதாக இருந்தது, அதனால்தான் ஆட்கொண்டான் என்று நினைத்தனர். ஆனால், உண்மை அதுவன்று. அன்று அவன் ஆட்கொண்டதற்குக் காரணம் அவனது கருணை தவிர வேறில்லை’ என்றவாறு. 'கோன் என்னைக் கூடக் குளிர்ந்து ஊதாய் என்று பாடுவதால் இப்பாடலும் 224, 233ஆம் பாடல்களும் தூது இலக்கணத்திற்குப் பொருந்தி வருகின்றன. 228. கருஆய் உலகினுக்கு அப்புறம் ஆய் இப் புறத்தே மரு ஆர் மலர்க் குழல் மாதினொடும் வந்தருளி அரு ஆய் மறை பயில் அந்தணன் ஆய் ஆண்டுகொண்ட திரு ஆன தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ 14 திருவான தேவன்-அழகிய ஞானாகாச வடிவான தேவன். இப்பாடலின் பொருள் எளிதாக விளங்குகின்ற ஒன்றாகும். என்றாலும், கருவாய் உலகினுக்கு அப்புறமாய்' என்ற தொடர் பல்வேறு சிந்தனைகளைத் து.ாண்டுகிறது. கருவாய் என்றதால் இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு முதற் காரணன் என்பது பெறப்பட்டது. உலகினுக்கு அப்புறமாய் என்றதால் மீட்டும் கருத் தன்மையையே குறிக்கின்றார். அதாவது காணப்படுகின்ற பிரபஞ்சத்திற்கு அப்புறமாய், என்றதால், பிரபஞ்சத் தோற்றத்திற்கு முற்பட்ட நிலை யையே இது குறிக்கின்றது. 'உலகினுக்கு அப்புறமாய்