பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 67 (நாலாயி. 3132) என்றும் பாடியுள்ளார். இந்த அருளாளப் பெருமக்கள் தாமே பாடியதாக நாம் நினைக்கின்றோம் என்றாலும் தம்முள் இருந்து இறைவனே பாடினான் என்று அவர்களே பாடியுள்ளனர். எதிரே உள்ளவர்கள் செய்யும் பிழையைப் பொறுத்துக் கொள்வதற்கு எவ்வளவு கருணையுள்ளவர்களுக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லை வந்துவிட்டால் 'சீ' போ உனக்குச் செய்தது போதும் என்று சொல்லும் நிலைமை தோன்றி விடும். தம்மைப் பொறுத்தவரை தில்லைக் கூத்தன் அவ்வாறு செய்யவில்லை என்பதைப் பேயேனது உள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனை' என்ற தொடரால் கூறுகிறார் அடிகளார். எந்த அளவுக்கு அவன் பொறுத்தான்? "சீ என்று சொல்லும் அளவுக்கு நான் பிழைசெய்தும் அப்படிச் சொல்லி ஒதுக்காமல் என் பணிகளை ஏற்றுக்கொண்டருளினான்' என்கிறார். எத்துணைப் பிழைகளையும் பொறுக்கும் பெற்றி, தாய் ஒருத்திக்கே உண்டு. ஆதலின் தாயான ஈசற்கே என்றார். 227. நான் தனக்கு அன்பு இன்மை நானும் தானும் அறிவோம் தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார் ஆன கருணையும் அங்கு உற்றேதான் அவனே கோன் என்னைக் கூடக் குளிர்ந்து ஊதாய் கோத்தும்பி 13 தனக்கு-இறைவனுக்கு. ஆன கருணை-அத்தகைய கருணை. மேல் 218ஆம் பாடலில் கூறப்பெற்ற சில பகுதிகளை இங்கு நினைவில் கொண்டுவரவேண்டும். எவ்வளவு அதிகமாக அன்பிருந்தாலும் தமக்கு அன்பே இல்லை என்று சொல்லிக்கொள்வது பொதுவாக அடியார்களின் பொது இயல்பு.