பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இவ்வினாவிற்கு விடையாக இல்லை என்கிறார் அடிகளார். ‘நான் பாடவேண்டும் என்று நினைக்கக்கூட இல்லை. ஆனால் நாயேனாகிய என்னைத் தன்னடிகளைப் பாடுமாறு பணித்தவனும் அவனே, பாடுவித்தவனும் அவனே என்ற கருத்தை முதலடியில் பேசுகிறார். திருஞானசம்பந்தர் 'எனதுரை தனதுரையாக' (திருமுறை: 1766) என்று பாடியதும் நம்மாழ்வார் ‘என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இன்தமிழ் பாடிய ஈசன் (நாலா:2832) என்று பாடியதும் அடிகளார் 'பாடுவித்த நாயகன்' என்று சொல்வதும் ஒரே பொருளைத் தருவனவாகும். அடிகளார் பாடலில் பாடுவித்த என்ற பிறவினை வாய்பாடு பயன்படுத்தப்பெற்றிருப்பினும், உண்மையில் இது பாடினான் என்ற பொருளையே தரும். இதுபற்றித் திருவண்டப்பகுதியில் கூறவந்த அடிகளார் என்னில் கருணை வான்தேன் கலக்க அருளொடு பரா அமுது ஆக்கினன்' (திருவாச3-179-18) என்று கூறியுள்ளமை இங்குச் சிந்திக்கத்தக்கது. மணிவாசகர் என்ற கருவியை எடுத்துக் கொண்டு, அதில் தன் கருணையாகிய தேனை நிரப்பி, பரா அமுது ஆக்கினான் என்று கூறுவதால், மணிவாசகர் என்ற தனிமனிதர் தம் உள்ளத்தில் தோன்றிய உந்து சக்தியால் இதனைப் பாடவில்லை என்பதை அண்டப் பகுதியின் இடமும், பாடுவித்த என்ற இங்கு வந்த சொல்லும் நன்கு வெளிப்படுத்தும். இதே கருத்தை ‘என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இன்தமிழ் பாடிய ஈசனை என்பது முதல் (நாலாயி 2832-2842 பத்துப் பாடல்களிலும் நம்மாழ்வார் பாடியுள்ளார். அத்தோடு நில்லாமல், என் நெஞ்சத் துள்ளிருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து