பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 65 நெஞ்சை உருக்குவதற்குக் “கல்லைப் பிசைந்து கனியாக்கி’ என்ற தொடரை அடிகளார் வேறுபல இடங்களிலும் பேசுகிறார். 226. நாயேனைத் தன் அடிகள் பாடுவித்த நாயகனைப் பேயேனது உள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும் தாய் ஆன ஈசற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ 12 சீ ஏதும் இல்லாது-வெறுப்புணர்ச்சி சிறிதும் இன்றி. உள்ளப்பிழை-தியன சிந்தித்தலாகிய மனப்பிழை. 'நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை' என்ற தொடரில் பாடுவித்த என்ற சொல், அடிகளாரின் வாழ்க் கையில் நிகழ்ந்த ஒர் ஒப்பற்ற நிகழ்ச்சியைக் குறிப்பதாகும். திருவாசகம் முழுவதும் அடிகளார் பாடினார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பெருந்துறையில் எல்லையற்ற இறையனுபவத்தை, பிறர் யாரும் பெறாத நிலையை, ஒரே விநாடியில் பெற்றார் என்பதிலும் ஐயமில்லை. அப்படியானால் மாபெரும் கவிஞராகிய இவர், தம் அனுபவத்தைச் சிறந்த பாடல்கள்மூலம் தாமே வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால், அதனைத் தவறு என்று சொல்வதற்கு ஏதும் இல்லை. முன்னரே திருக்கோவையார் பாடி, சிறந்த கவிதை அனுபவம் பெற்றவர் ஆதலின், இப்போது திருவாசகம் பாடுவதில் புதுமை ஒன்றும் இல்லை. அப்படியானால் அடிகளார் திருவாசகம் பாட உந்துசக்தியாக இருந்தது எது? புலமை, பாடலியற்றும் ஆற்றல், இறையனுபவம் என்ற மூன்றும் நிறைந்து நின்ற நிலையில், திருவாசகம் பாட வேண்டும் என்ற உந்துசக்தி அவருடைய உள்ளத்திலேயே எழுந்திருக்கலாமல்லவா?