பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 அப்படியே தரத்தான் வேண்டுமென்றால் முதலாவது ஆளுக்குக் கண்ணையும், இரண்டாமவர்க்குக் G5-అ செவியையும் தருவதுடன், மூன்றாமவர்க்கு நோயையும் போக்க வேண்டும். இதே போன்று இறையனுபவத்தைத் தரவேண்டும் என்று நினைத்த இறைவன், அடிகளாரைப்பற்றி ஆராய்ந் தான். அனுபவத்தைப் பெற வேண்டுமானால் மென்மை யான இதயமும் அன்பு நிறைந்து உருகக்கூடிய உள்ளமும் வேண்டும். அப்பொழுதுதான் அந்த அருளை அனுபவிக்க முடியும். இவை தம்பால் இல்லை என்கிறார் அடிகளார். 'வன்னெஞ்சக் கள்வன் மனவலியன்’ என்ற தொடரில் தம்மைப்பற்றித் தாம் கொண்ட கருத்தை வெளியிடுகிறார். இதனை அறிந்த இறைவன் என்ன செய்தான்? இவருக்கு அமைதி உண்டாகுமாறு இவருடைய கல்போன்ற நெஞ்சை உருக்கினான் என்கிறார். ஆக, அடிகளார் கருத்துப்படி வன்னெஞ்சும், வலி மனமும் உடைய அவருக்கு அருள் செய்ய நினைத்த இறைவன், அவரிடமிருந்த இரு குறைகளையும் ஒருசேரப் போக்கினான். போக்கியதோடு அல்லாமல் உருகும் இயல்பையும் அதற்குத் தந்தான். வழியோடு போகும் ஒருவரை இழுத்து, அவருடைய வன்னெஞ்சத்தையும் கள்ளத்தையும் வலிய மனத்தையும் மாற்றி, கல் போன்ற நெஞ்சை உருக்கினான் என்றால், எதற்காக இதைச் செய்தான்? அவன் செய்த அருளிப் பாட்டைப் பெறக்கூடிய தகுதி, தம்பால் ஒரு சிறிதும் இல்லை என்பதை முதல் அடியில் கூறிய அடிகளார், பின்னர் இவற்றையெல்லாம் ஏன் செய்தான் என்ற வினாவிற்கு விடை கூறுவார்போல் கருணையினால் ஆண்டுகொண்டான்' என்று முடிக்கின்றார்.