பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 63 கிடைத்தும் அதனை இறுகப் பற்றிக்கொண்டு அனுபவிக்காமல் விட்டுவிட்டு வந்த தம்மைச் செல்வம் நயந்தறியா நாய்' என்று கூறிக்கொள்கிறார். { ரே வண்டே, தாய்போல் வந்து என்னை ஆண்டுகொண்ட வண்ணமெல்லாம் இப்போது நீ சென்று ஒளிபொருந்திய செல்வற்குச் சொல்வாயாக’ என்ற பொருளில் கோத்தும்பி! தாயுற்று வந்து என்னை ஆண்டுகொண்ட வண்ணமெல்லாம் தேயுற்ற செல்வற்கே ஊதாய்' என்று அமைந்திருப்பதைக் காணலாம். பல்வேறு நிறங்களையுடைய பூக்களை நாடிச் செல்லும் பழக்கமுடைய வண்டு, அப்பூக்களின் நிறங்களையே இனங் கண்டுகொண்டு, அவற்றின்பால் செல்கின்றது. இந்த துணுக்கத்தை அறிந்த அடிகளார், வண்டுக்கு இறைவன் பற்றி அடையாளம் சொல்லும்போது, வேறெதுவும் கூறாமல் தேயுற்ற செல்வன் என்ற இரண்டே சொற்களில் கூறிவிடுகிறார். தேயுற்ற செல்வன் என்பது ஒளிவடிவான, தேஜஸ் நிறைந்த செல்வன் என்ற பொருளைத் தருவதால், வண்டு எளிதாக அவனை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்றவாறு. 225. வல் நெஞ்சக் கள்வன் மன வலியன் என்னாதே கல் நெஞ்சு உருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட அன்னம் திளைக்கும் அணி தில்லை அம்பலவன் பொன் அம் கழலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பி 11 ஒருவருக்கு ஏதேனும் ஒரு நன்மையைச் செய்ய வேண்டுமானால் அதனைப் பெறக்கூடியவர்பற்றி நன்கு அறிய வேண்டும். கண் இழந்த ஒருவனுக்கு ஒவியத்தையும், முற்றிலும் காது கேளாத ஒருவனுக்குச் சிறந்த ஒசை ஒலிநாடாவையும், மஞ்சட் காமாலைக்காரனுக்கு இனிய பொங்கலையும் தருவது பயன் தராத செயலாகும்.