பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 பசுவை விட்டுப் பிரிய வேண்டும் என்ற எண்ணம் கன்றுக்கும் இல்லை. என்ன காரணத்தாலோ கன்று பிரிக்கப்பட்டு, அது நொந்துபோன நிலையை நுந்து கன்று' என்று அடிகளார் குறிப்பிடுகிறார். இவ்வாறு பொருள் கொள்வதற்கு அடிகளாரின் வாக்கே இடம் தருகிறது. பெருந்துறையில் திருவடி தீட்சை பெற்று அடியார்களி டையே அமர்ந்திருந்த அடிகளார், சில விநாடிகளில் அனைத்தையும் இழந்தார். இப்போது அவர் மனத்தில் ஒர் ஆதங்கம். தம்மைக் கூவி அழைத்து ஆட்கொண்ட குரு நாதரே, இப்போது ஒதுக்கிவிட்டாரே என்ற ஓர் எண்ணம் தோன்றிற்று. அந்த விநாடியிலேயே கருணைக் கடலாகிய குருநாதர் தம்மை ஒதுக்கவில்லை என்றும் உணர்கின்றார். அக்கருத்தை, உடையான் அடி நாயேனை தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று’ (திருவாச:4lஎன்று அவரே பாடியுள்ளார். ஆதலின், கன்றைப் பிரியும் நோக்கம் பசுவுக்கு இல்லை என்ற கருத்து பொருத்தமுடையதாகத் தெரிகின்றது. - யாரோ ஒருவர் முன் நின்று கன்றைப் பிரித்ததால் அது நுந்துவதாயிற்று. சாவா மூவாப் பெருவாழ்வளிக்கும் திருவடித் தொடர்பு தம்மை விட்டு நீங்கிவிட்டதாக அவர் நினைத்ததால் நோயுற்று மூத்து' என்று பாடுகிறார். பெருஞ்செல்வம் ஒருவருக்குக் கிடைத்தாலும் அதன் இயல்பு அறிந்து அதனை அனுபவிக்கக் கூடிய ஆற்றலும் சிந்தனையும் இல்லாதவர்க்கு அச்செல்வம் பயன்படாது போகும். எச்சில் சோற்றை உண்ணும் நாயைப் பஞ்சு மெத்தையில் ஏற்றி வைத்துப் பொற்கிண்ணத்தில் பால் சோற்றைத் தந்தாலும், அதனை ஒதுக்கிய நாய், நடு வீதிக்கு ஓடுவதுபோல, திருவடிப் பேறாகிய பெருஞ்செல்வம்