பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 61 ஞானேந்திரியம், அந்தக்கரணம் என்ற வரிசைக் கிரமத்தில், பருமையிலிருந்து நுண்மையை நோக்கிச் செல்கின்ற வரிசைப்பாட்டை அறியமுடியும். எனவேதான், இவை ஒன்றின் ஒன்று உயர்ந்தது என்று பேசப்படுகிறது. என்றாலும், இவை எவ்வளவு உயர்ந்து சென்றாலும், அவற்றையும் கடந்து நிற்பவன் கறைமிடற்றன் என்க. உயிர்களைப் பொறுத்தவரை மரணம் பிறப்பு என்ற இரண்டுமே புரிந்துகொள்ள முடியாத புதிராகும். மரணத்தைக் கண்டு அஞ்சுதலும், பிறப்பில் மகிழ்தலும் உயிர்களுக்கு இயல்பாக அமைந்துள்ள தன்மையாகும். இதனையே மயக்கு என்கிறார். இறை அனுபவம் கிடைத்தவுடன் இவை இரண்டும் பற்றிய மயக்கம் தெளிகிறது. 224. நோய் உற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கு இருந்து நாய் உற்ற செல்வம் நயந்து அறியாவண்ணம் எல்லாம் தாய் உற்று வந்து என்னை ஆண்டுகொண்ட தன்கருணைத் தேய் உற்ற செல்வற்கே சென்று ஊதாய் கோத்தும்பி 10 நுந்துகன்றாய்-தள்ளப்பட்டகாளையாய். நாயுற்ற செல்வம்நாய்பெற்ற செல்வம் (போல). இப்பாடலில் இரண்டு முதுமொழிகள் இடம்பெற்றுள் ளன. துந்துகன்று என்பது ஒன்று, ‘நாயுற்ற செல்வம்' என்பது மற்றொன்று, துந்துதல் என்ற சொல்லுக்குத் தள்ளுதல், ஒதுக்குதல் என்ற பொருள் உண்டேனும் ஒரு பசு தன் கன்றை எந்த நிலையிலும் ஒதுக்காது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. எனவே, பசுவால் ஒதுக்கப்பட்ட கன்று என்று பொருள் கொள்ளாமல் பசுவினிடமிருந்து பிறரால் பிரிக்கப்பட்ட கன்று என்று பொருள் கொள்வதே பொருத்தமாகும். கன்றை விட்டுப் பிரிய வேண்டும் என்ற எண்ணம் பசுவிற்கும் இல்லை