பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இனி என் தாதை தாதைக்கும், எம் அன்)னைக்கும்’ என்ற தொடர் குடிப்பிறப்பின் நுணுக்கத்தை விஞ்ஞான உலகம் காண்பதற்குப் பன்னூறு ஆண்டுகள் முன்னரே இந்நாட்டவர் அறிந்திருந்தனர் என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டாகும். தந்தை வழி என்பது ஒன்று. தாய் வழி என்பது ஒன்று. இவர்களிடையே நம்பிக்கை, பண்பாடு என்பவை மாறுபட்டிருப்பின் பிறக்கும் குழந்தை எந்த ஒன்றிலும் ஆழ்ந்த நம்பிக்கை உடையதாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. தாய், தந்தை இருவரும் ஒத்த நம்பிக்கை உடையவர்களாக இருப்பின் வரும் சந்ததி வலுவான நம்பிக்கை உடையதாக இருக்கும். இவற்றையெல்லாம் மனத்துட் கொண்டே என் தாதை தாதைக்கும் எம் அன்)னைக்கும் தம் பெருமான்' என்கிறார் அடிகளார். இந்நாட்டைப் பொறுத்தவரை 'பழ அடியார்’ என்ற ஒரு தொடருண்டு. அதாவது, அடிமைத்திறம் பூண்டவர் களின் பரம்பரையில் வருகின்ற ஒருவர், மிக ஆழமான இறைப்பற்று உடையவராக இருக்கிறார் என்பதனைக் குறிப்பதற்கே அத்தொடர் தோன்றிற்று. 223. கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறை மிடற்றன் சரணங்களே சென்று சார்தலுமே தான் எனக்கு மரணம் பிறப்பு என்று இவை இரண்டின் மயக்கு அறுத்த கருணைக் கடலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ 9 கறைமிடற்றன்-நீலகண்டன். மயக்கு-கலப்பு. 'கரணங்கள் எல்லாம் என்று கூறியமையின் புறக் கரணம், அகக் கரணம் ஆகிய அனைத்தையும் கூறினாராயிற்று. இனி, இந்தக் கரணங்கள் ஒன்றின் ஒன்று மேம்பட்டவை என்ற கருத்தும் உண்டு. கன்மேந்திரியம்,