பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 59 காரணன் என்ற தொடருக்குப் பொருளாக இப்பகுதி அமைந்துள்ளது. அப்படிப்பட்ட ஒருவன், குன்றாத செல்வம் (அருள்) உடையவன், அவன் என்ன செய்தான்? வள்ளல்கள், யாருக்குச் செய்கிறோம் என்ற சிந்தனை இல்லாமல் வாரி வழங்கும் இயல்பினர். அதேபோல, கடையான நாயாகிய என்னைப் பொற்சிவிகையில் ஏற்றினான் இந்த வள்ளல். அவனுடைய அருள் காரணமாகப் பொற்சிவிகையில் ஏற்றினாலும், தாம் யார் என்பதை மறவாமல் அடிகளார் உள்ளார். ஆதலின் நாய் சிவிகை ஏற்றுவித்த என்கிறார். இத்தொடருக்கு முன்னே உள்ள தொடர் நன்றாக வைத்து’ என்பதாகும். நன்றாக வைத்தல் வேறு, நாய் சிவிகை ஏற்றுவித்தல் வேறு. பல சமயங்களில் ஏதோ ஒரு காரணம்பற்றி எவ்விதத் தகுதியும் இல்லாதவர்கட்கும் பெரும்பதவி கிடைத்து விடுகிறது. இத்தகைய நிகழ்ச்சி உலகியலில்மட்டு மன்றி, அருள் அனுபவ நிலையிலும் ஒரோவழி வருவதுண்டு. ஏதோ ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக நாயை ஒரு முறை சிவிகையில் ஏற்றினால், மறுமுறையும் அது நிகழும் என்று சொல்வதற்கில்லை. அதுபோல, அடிகளாருக்குக் கிடைத்த அருள் அனுபவம் ஏதோ ஒரு முறை வந்துபோய்விட்ட ஒன்று என்று நினைத்தால் அது தவறு என்பதைக் குறிக்கவே நாய் சிவிகை ஏற்றுவித்த' என்பதன் முன்னர் நன்றாக வைத்து என்னை” என்று பாடுகிறார். திருவடி தீட்சை கிடைத்தபிறகு, அந்த அருள் அனுபவத்தில் மேலும் கீழுமாக முக்குளித்துக் கொண்டிருந்தாரே யன்றி முற்றிலும் அதனை விட்டு நீங்கிவிடும் நிலைமை ஏற்படவேயில்லை. இதுவே நன்றாக வைத்த செய்தி யாகும்.