பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 திருவெம்பாவையில் வரும் யாம், எமக்கு என வரும் பன்மைச் சொற்கள் மேலே கூறப்பெற்ற பொது இலக்கணத்திற்கு மாறுபட்டுப் பன்மையாகவே பொருள் கொள்ளப்படும். காரணம், கூட்டமாக நின்று பெண்கள் பாடும் பாட்டாகும் அவை. 222. ஒன்று ஆய் முளைத்து எழுந்து எத்தனையோ கவடுவிட்டு நன்று ஆக வைத்து என்னை நாய் சிவிகை ஏற்றுவித்த என் தாதை தாதைக்கும் எம் அனைக்கும் தம் பெருமான் குன்றாத செல்வற்கே சென்றுஊதாய் கோத்தும்பீ 8 ஒன்றாய் முளைத்தெழுந்து-சிவதத்துவமாக முதலிற்றோன்றி. எத்தனையோ கவடுவிட்டு-கலை புவனங்கள் தத்துவங்களாகிற கிளைகளாகவிரிந்து. நாய்சிவிகை ஏற்றுவித்த-நாயைப் பல்லக்கில் ஏற்றினாற்போல என்னை ஆட்கொண்ட எல்லாவற்றிற்கும் மூலமாய் நிற்கும் பரம்பொருள் ஒன்றேயாதலின் ஒன்றாய் முளைத்தெழுந்து என்றார். இனி எல்லாப் பொருளிலும் வேறாயும் உடனாயும் அவனே நிற்றலின் எத்தனையோ கவடு விட்டு’ என்றார். இறைவனை மரம் என்று உருவகம் செய்ததற்கு ஏற்ப "முளைத்து, எழுந்து' என்ற சொற்களைப் பயன் படுத்தினார். அதுபோலக் கவடு(கிளை) விட்டு' என்ற தொடரையும் பயன்படுத்தினார். ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருள் முளைப்பதுமில்லை; எழுவதுமில்லை; கவடுவிடுவதுமில்லை. அவ்வாறிருக்க, அடிகளார் இந்த உருவகத்தை ஏன் பயன்படுத்தினார் என்று நினைக்கத் தோன்றுகிறது. விதையுனுள் மரமும், மரத்துள் விதையும் மறைந்திருப்பது போல, இறைவனில் உயிர்க்ளும், உயிர்களுள் இறைவனும் மறைந்துநிற்றல் சிந்திப்பவர்க்குப் புலனாகும். பிரபஞ்ச