பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சாழல் 107 சுடுகாட்டில் வாழ்ந்தாலென்ன ? இவற்றைக் கொண்டு அவனை மதிப்பிடுதல் பேதமையின்பாற்படும் என்ற விடைகளைச் சாழல் என்ற சொல்லுடன் கூறிமுடிக்கிறாள். காணேடி, சாழலோ என்ற இரண்டு சொற்களும், இரு சீராய் நின்று எதிரெதிராக உள்ள இரண்டு பெண்கள் ஒருவர் கையை ஒருவர் தட்டி ஓசை எழுப்புவதைக் குறிக்கின்றன. இந்த இருபது பாடல்களையும் ஒரிடம் தவிர எத்தனை முறை படித்தாலும் 'சிவனுடைய காருணியம்’ எவ்விடத்தும் பேசப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. தானந்தம் இல்லான்’ என்று தொடங்கும் 264 ஆம் பாடலில் இத்தொகுப்பு முறைக்கு மாறாக, தனிப்பட்ட முறையில் அவன் தமக்குக் காட்டிய கருணையை வியந்து பேசுகிறார். பத்தொன்பது பாடல்களின் கருத்தையும் விட்டுவிட்டு இந்த ஒரு பாடலை மனத்தும் கொண்டு ‘சிவனுடைய காருணியம்’ என்று உட் தலைப்புத் தந்தனர்போலும், 255. பூசுவதும் வெள் நீறு பூண்பதுவும் பொங்கு அரவம் பேசுவதும் திருவாயால் மறை போலும் காண் ஏடி பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டு என்னை ஈசன் அவன் எவ் உயிர்க்கும் இயல்பு ஆனான் சாழலோ 1 பொங்கு அரவம்-சீறுகின்ற பாம்பு, மறை-இரகசியம். இப்பாடலின் முற்பகுதி வினாப்போலவும் பிற்பகுதி அந்த வினாவிற்குரிய விடைபோலவும் அமைந்திருத்தலைக் கானலாம். சிவபெருமானைத் தலைவனாக ஏற்றுக்கொள்ளாதவர் கள் அவன்மாட்டுள்ள சிலவற்றை அர்த்தமற்ற பொருள்கள் என்று கூறி இவற்றை வைத்திருப்பவன் எப்படித் தலைவனாக முடியும் என்று கேட்பதை, தோழி ஏற்றுக்