பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 கொண்டு கேட்டதுபோலப் பாடலின் முற்பகுதி நிற்கிறது. இப்பகுதியில் எந்த ஒரு வினாவும் நேரடியாகக் கேட்கப்படவில்லை. இன்னும் கூறப்போனால், மேலோட்ட மாகப் பார்ப்பதற்கு எள்ளி நகையாடுவது போலவும் இது அமைந்துள்ளது. தோழி: தலைவி சாம்பலைப் பூசிக்கொண்டு சினமுடைய பாம்புகளை உடம்பில் அணிந்துகொண்டு பைத்தியம் போலிருக்கின்ற ஒருவன், வாய் திறந்து பேசினால், ஒருவாறு அவனைப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைத்தேன். ஆனால், அவன் திருவாயால் பேசுவது வெறும் ஒலிக் குறிப்புக்களாக உள்ளனவே தவிர ஒன்றும் புரியாத புதிராக உள்ளது. ('மறை என்ற சொல்லுக்குப் பொருள் புரியாத சொற்கள் என்பது ஒரு பொருள். வேதம் என்பது மற்றொரு பொருள்.) தலைவி தோழி! அவன் பூசியுள்ளதையும், பூண்டுள்ள தையும், அவன் பேசுகின்றவற்றையும் வைத்துக் கொண்டு அவனை எப்படி எடைபோடப் போகிறாய்? (அவன் ஈசன் பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்கட்கும் தானே முயன்று தலைமைப் பதவியை அவன் மேற்கொள்ளவில்லை. இயல்பாகவே அவன் உயிர்கட்குத் தலைவனாக (ஈசனாக உள்ளான். ) உலகிடை ஒரு குழுவிற்கு அல்லது கூட்டத்திற்கு அல்லது நாட்டிற்கு ஒருவர் தலைவர் என்றால். அத் தலைமைப் பதவி இருவகையில் அவருக்குக் கிட்டலாம். ஒன்று, அவராக முனைந்து அனைவரையும் ஆட்படுத்தி, தலைமைப் பதவியை வென்று பெறுவது. இரண்டாவது